'கம்மீஸ்' (Gummies): மாத்திரைகளுக்கு ஒரு சிறந்த மாற்றா? உண்மையிலேயே ஆரோக்கியமானவைதானா?

Gummies candy and teeth problem
Gummies candyCredits: AI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மாத்திரைகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும், பெரிய மாத்திரைகளை விழுங்குவதற்கு சிரமப்படும் பெரியவர்களுக்கும் 'கம்மீஸ்' (Gummies) ஒரு சிறந்த மாற்றாகத் தெரிகிறது. ஆனால், இவை உண்மையிலேயே ஆரோக்கியமானவைதானா?

தயாரிப்பு முறை மற்றும் உட்பொருட்கள்: கம்மி மிட்டாய்கள் பெரும்பாலும் சோளச் சிரப் (Corn Syrup), சுக்ரோஸ் (Sucrose), ஜெலட்டின், ஸ்டார்ச் மற்றும் தண்ணீர் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றுடன் பல்வேறு செயற்கை வண்ணங்களும், சுவையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன. மேலும், ஒருவிதமான புளிப்புச் சுவைக்காகச் சிட்ரிக் அமிலம் போன்ற உணவு அமிலங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

வகைகள் மற்றும் வரவேற்பு: இவை மருத்துவக் குணம் நிறைந்ததாகக் கருதப்படுவதாலும், மிட்டாய் போன்ற இனிப்புச் சுவையில் கிடைப்பதாலும் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இவை இயற்கை நிறங்கள் மற்றும் செயற்கை நிறங்கள் என இரு வகைகளில் கிடைக்கின்றன. குறிப்பாக:

  • முடி மற்றும் சருமத்திற்கான வைட்டமின் கம்மீஸ்.

  • இரும்புச் சத்து மற்றும் கால்சியம் கம்மீஸ்.

  • தூக்கமின்மைப் பிரச்னைக்காக 'மெலடோனின்' கம்மீஸ்.

வாங்கும்போது கவனிக்க வேண்டியவை: கம்மீஸ் வாங்கும்போது அதில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளின் அளவைக் கவனிப்பது அவசியம். அதோடு, ஊட்டச்சத்தின் அளவு, அது சைவமா அல்லது அசைவமா (ஜெலட்டின் பயன்பாடு), மற்றும் காலாவதித் தேதி (Expiry Date) ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். அதிக சர்க்கரை கலந்த கம்மீஸ்கள் பற்சிதைவை உண்டாக்கும் என்பதை மறக்கக் கூடாது.

அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்:

  1. சர்க்கரை அளவு: இவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

  2. பல் பாதிப்பு: கம்மீஸ் பிசுபிசுப்பானவை என்பதால் பற்களில் ஒட்டிக்கொள்ளும். இதனால் பாக்டீரியாக்கள் வளர்ந்து சொத்தை மற்றும் பற்சிதைவை உண்டாக்குகின்றன.

  3. ஊட்டச்சத்து முரண்பாடு: கம்மீஸ்களில் உள்ள வைட்டமின்கள் பெரும்பாலும் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அதே அளவில் இருப்பதில்லை; சில சமயம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

  4. நச்சுத்தன்மை (Toxicity): சுவையாக இருப்பதால் குழந்தைகள் இவற்றை அதிகமாகச் சாப்பிட வாய்ப்புள்ளது. அப்படிச் சாப்பிடும்போது வைட்டமின் A, D, E, K மற்றும் இரும்புச் சத்துக்கள் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும்.

  5. செரிமானப் பிரச்னைகள்: அளவுக்கு மிஞ்சினால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வயிற்று வலி மற்றும் தலைவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரு வாரம் தரையில் சப்பணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்! அப்பறம் பாருங்கள் அது செய்யும் மேஜிக்!
Gummies candy and teeth problem

யார் தவிர்க்க வேண்டும்? நீரிழிவு நோயாளிகள், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், பி.சி.ஓ.எஸ் (PCOS), உடல் பருமன் (Obesity), கல்லீரல் அல்லது சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி இவற்றை எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com