உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவோர் ஜாக்கிரதை!

Beware of those who keep potatoes in the fridge
Beware of those who keep potatoes in the fridge

லரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் உருளைக்கிழங்கு முக்கியமாக உள்ளது. குறிப்பாக, இதை வேகவைத்து செய்யப்படும் உணவுகளை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், வேக வைத்த உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது சரியா?

வேக வைத்த உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்தால் அவற்றின் ஊட்டச்சத்து மற்றும் சுவை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே, உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது நல்ல நடைமுறையாக இருக்காது என்பதற்கான காரணங்கள் சில உள்ளன. அவை என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மாறுபடும் அமைப்பு: வேக வைத்த உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைக்கும்போது அதன் உண்மையான அமைப்பு முற்றிலும் மாறிவிடுகிறது. அதன் மாவுச்சத்துக்கள் கிறிஸ்டலாக மாறி அதை மீண்டும் சூடுபடுத்தும்போது முற்றிலும் மாறுபட்ட மாவு அமைப்புக்கு வழிவகுக்கிறது.

சுவை மற்றும் ஊட்டச்சத்து இழப்பு: வேக வைத்த உருளைக்கிழங்கை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தும்போது அதன் சுவை முற்றிலுமாக மாறிவிடும். அதிகப்படியான குளிர்ச்சியால் அதன் சுவை முடங்கிப்போவதால், மீண்டும் வேக வைக்கும்போது பழைய சுவையில் அவை இருப்பதில்லை. மேலும், அதன் உண்மையான ஊட்டச்சத்து மூலங்களும் பாதிக்கப்படுகிறது. உருளைக்கிழங்கில் உடலுக்குத் தேவையான தாதுக்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன. ஆனால், அவற்றை வேகவைத்து குளிரூட்டும்போது  ஊட்டச்சத்துக்கள் இழப்பை சந்திக்கிறது.

இதையும் படியுங்கள்:
மருத்துவப் பயன்மிக்க சைவ முட்டைப் பழங்கள்!
Beware of those who keep potatoes in the fridge

புற்றுநோய்: பிரிட்ஜில் வைத்து சேமிக்கப்பட்ட உருளைக்கிழங்கை மீண்டும் அதிக வெப்பத்தில் சூடு படுத்தும்போது, உருளைக்கிழங்கில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் சர்க்கரைகள் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனமாக மாறலாம்.

அதிகரிக்கும் அக்ரிலாமைடு: வேக வைத்த உருளைக்கிழங்கை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து மீண்டும் வேக வைத்தால் அல்லது வறுத்தால் அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனம் வெளியேறும்.

எனவே, என்னதான் குளிர்சாதனப்பெட்டி நமக்கு பல வகையில் உதவியாக இருந்தாலும், அவற்றில் வைத்துப் பயன்படுத்தப்படும் எல்லா உணவுகளும் உடலுக்கு நல்லது என சொல்ல முடியாது. எனவே, வேகவைத்த உருளைக்கிழங்கை பிரிட்ஜில் அதிக குளிர் இல்லாத அரை வெப்பநிலை கொண்ட இடத்தில் வைத்து சேமிப்பது நல்லது. எனவே, அடுத்த முறை வேக வைத்த உருளைக்கிழங்கை சரியாக பதப்படுத்தி சேமிக்கிறீர்களா என்பதில் கவனம் செலுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com