உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் கருப்பட்டி!

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் கருப்பட்டி!
Published on

னை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரிலிருந்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைப் கொடுப்பதில் கருப்பட்டி பெரும் பங்காற்றுகிறது. தொடர்ந்து கருப்பட்டியை உபயோகப்படுத்துவதானல் சருமப் பொலிவைப் பெறலாம். உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் கருப்பட்டியின் இன்னும் சில பலன்களை இந்தப் பதிவில் காண்போம்.

* சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

* ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட வர, வாயுத் தொல்லை நீங்கும்.

* குப்பைமேனி கீரையுடன் கருப்பட்டியை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர, ‌வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை ஆகியவை நீங்கும்.

* நாம் தினசரி பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியை உபயோகிக்க, பற்களும், எலும்புகளும் பலப்படும்.

* பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுத்து வந்தால் இடுப்பு வலுப்பெறுவதுடன் கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

* நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட்டு வர, இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படும். மேலும், அடிக்கடி சிறுநீர் பிரிவதும் குறையும்.

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெள்ளை சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியைப் உபயோகப்படுத்துவதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைத்து விடும்.

* சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு வலுவூட்ட மிகவும் ஏற்றது.

* சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்களுக்குக் கொடுக்க, தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைகளும் நல்ல ஊட்டச்சத்துக்களைப் பெற்று ஆரோக்கியமாக வளரும்.

* காபியில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி சேர்த்து குடிப்பது உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com