சாப்பிட்டதும் எகிறும் சுகர்... வெறும் 10 ரூபாயில் ஒரு தீர்வு! இதை ட்ரை பண்ணுங்க!

Badam pisin
Badam pisin
Published on

இன்றைய காலகட்டத்தில், "உங்களுக்கு சுகர் இருக்கா?" என்று கேட்பது மிகச் சாதாரணமான விசாரிப்பாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு சர்க்கரை நோய் நம் சமூகத்தில் ஊடுருவி விட்டது. பலரும் உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பார்கள், சரியான நேரத்திற்கு மாத்திரை போடுவார்கள். 

ஆனாலும், மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிக்கும்போது சர்க்கரை அளவு குறையாமலே இருக்கும். குறிப்பாக, சாப்பிட்ட பிறகு பலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 'கிடுகிடு'வென உயரும். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு எளிய பொருள் தான் 'பாதாம் பிசின்'.

பொதுவாக ஜிகர்தண்டாவில் பயன்படுத்தப்படும் இந்த பாதாம் பிசின், உடல் சூட்டைத் தணிப்பதற்கு மட்டுமல்ல, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதிலும் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைப்படி, இதைச் சரியான முறையில் எடுத்துக்கொண்டால் இன்சுலின் செயல்பாட்டைச் சீராக்க முடியும்.

எப்படிச் சாப்பிடுவது?

  1. தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன், ஒன்று அல்லது இரண்டு சிறிய துண்டு பாதாம் பிசினை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள்.

  2. காலையில் எழுந்ததும் பார்த்தால், அது நன்கு ஊறி, ஜெல் போலக் கிண்ணம் நிரம்பி இருக்கும்.

  3. இந்த ஜெல்லில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

  4. அதேபோல், மதிய உணவு மற்றும் இரவு உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவும் இதை அருந்துவது சிறந்தது. இது உணவிலிருந்து சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தைக் குறைக்கிறது.

பாதாம் பிசின் சாப்பிடுவது மட்டும் போதாது; வாழ்க்கை முறையிலும் ஒரு சிறு மாற்றம் தேவை. நம்மில் பலர் சாப்பிட்டவுடன் சோபாவிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து விடுவோம். இதுதான் மிகப் பெரிய தவறு. ஒவ்வொரு வேளை உணவு உண்ட பிறகும், குறைந்தது 10 நிமிடங்களாவது மிதமான நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், உணவுக்குப் பின் அதிகரிக்கும் சர்க்கரை அளவை 30 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!
Badam pisin

இறுதியாக, மன அழுத்தம் என்ற அரக்கனை விரட்ட வேண்டும். நீங்கள் எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும், மனது அமைதியாக இல்லையென்றால் உடலில் 'கார்டிசோல்' சுரந்து சர்க்கரை அளவை ஏற்றிவிடும். எனவே, காலை அல்லது இரவு வேளையில் பிராணாயாமம் அல்லது எளிய யோகாசனங்களைச் செய்வது மனதை அமைதிப்படுத்தி, நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

பாதாம் பிசின் போன்ற இயற்கையான உணவு முறைகளையும், நடைப்பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகளையும் நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டால், சர்க்கரை நோயைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை. மாத்திரைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த இயற்கை வழிமுறைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com