Brain Health: மூளையை பாதிக்கும் 10 விஷயங்கள்!
Brain Health:
நம் தினசரி பழக்க வழக்கங்கள் நமது மூளையை பாதிக்கும் அவை என்னென்ன பழக்கங்கள் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
1. தொடர்ந்து செல் உபயோகிப்பது
சமூக வலைதளத்தை தொடர்ந்து பார்ப்பதால் அதன் எதிர்மறையான விஷயங்கள் நம் பதட்டம், பயம் மற்றும் சோர்வை அதிகரித்து மூளையை பாதிக்கும். அதுவும் படுப்பதற்கு முன் பார்ப்பதால், தூக்கத்தை கெடுத்து மூளையை பாதிக்கும் கைபேசியை மிதமாக பார்ப்பதுடன் நேர்மறையான விஷயங்களையே காண வேண்டும்.
2. காலை உணவை தவிர்ப்பது
முதலில் உண்ணும் உணவு மிகவும் முக்கியமானது. உங்கள் மூளைக்கு ஊட்டச்சத்துக்களும், க்ளூகோசும் மிக முக்கியம் அதை தவிர்ப்பது சக்தியை குறைத்து உங்களின் வேலையில் சரியாக ஈடுபட முடியாமல் செய்யும். புரதம் மற்றும் சமச்சீரான ப்ரேக் ஃபாஸ்ட் மிக முக்கியம்.
3. அதிக காபி குடிப்பது
அதிக காபி குடிப்பதால் பதட்டம், தூக்கமின்மை, கவலை இவையெல்லாம் ஏற்படும். மூளை செயல்பாடு பாதிக்கப்படும்.
4. மனிதர்களோடு நேரடி தொடர்பின்மை
நம் நண்பர்கள் உறவினர்களிடையே நேரடி தொடர்பு கொண்டு நன்கு பழக வேண்டும். அவர்களைத் தவிர்த்து வாழ்வதால் மனச்சோர்வு ஏற்படும் தினசரி மனிதர்களுடன் உள்ள தொடர்பு இருந்தால் தான் மன அமைதி கிட்டும் மூளை நன்கு செயல்படும். தனித்து வாழ்வதால் மன சோர்வு கவலை ஏற்படும். இது மூளையை பாதிக்கும்.
5. உடல் உழைப்பின்மை
உடல் உழைப்பு என்பது உடல் மற்றும் மனதையும் ஆரோக்கியப்படுத்தும். இதனால் இரத்த ஓட்டம் அதிகமாகி மூளைக்கு நல்ல பிராணவாயு கிடைக்கும். வேலையே செய்யாமல் இருப்பவர்களுக்கு மூளை ஆரோக்கியத்துடன் இருக்காது.
6. எதிர்மறை செய்திகள்
எதிர்மறை செய்திகளால் மூளைக்கு அழுத்தம் ஏற்படும். நெகடிவ் செய்திகளால் கார்டிசால் அதிகமாகும். இதனால் பதட்டம் அதிகமாகி மூளையை பாதிக்கும்.
7. பலவேலைகளைச் செய்வது
ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுவதால் மூளைப் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். இதனால் உங்களக்குக் கவனக்குறைபாடு ஏற்படும். மூளையை மிக வேகமாக சோர்வடையும். மேலும் வேலையில் முழு திறமையையும் காட்ட முடியாது.
8. சூரிய வெளிச்சமின்மை
உங்கள் மூளை நன்கு செயல்பட வைட்டமின் டி சத்து மிக அவசியமாகிறது. சூரிய வெளிச்சம் இல்லாமல் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செரடோனின் அளவு குறையும். இது தூக்கமின்மையை அதிகரித்த குழப்பத்தை ஏற்படுத்தும் காலை நேரத்தில் வெளியே சென்று வருவதால், மூளை செயல்பாடு மேம்படும்.
9. அதிக சர்க்கரை
அதிக சர்க்கரை மற்றும் சீனி கலந்த பானங்கள் அழற்சியை உண்டாக்கும். இது உங்கள் ஞாபக சக்தியை பாதிக்கும். அதிக சர்க்கரையால் மூளை பாதிப்பு ஏற்படும். இயற்கை சர்க்கரை கொண்ட பழங்களை உட்கொள்வது சிறந்தது.
10. தூக்கத்தை புறக்கணிப்பது
தூக்கத்தை தவிர்ப்பதால் உடல், மூளை இரண்டுமே பாதிக்கப்படும். மனிதனுக்கு நல்ல தூக்கம் அவசியமானது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)