
கேன்சர் என்றாலே ஒரு வித பயம் அனைவருக்கும் ஏற்படுகிறது. தற்காலத்தில் இந்த கேன்சர் ஆண் பெண் இருவரையும் அதிக அளவில் பாதித்து வருகிறது. 1971ம் ஆண்டு கேன்சருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை தான் பிரதானமாக இருந்தது. அடுத்து ரேடியேஷன் கீமோதெரபி இரண்டும் வந்தது.
குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் மார்பக கேன்சர் வருகிறது. முன்பு 100 பேரில் 18 பேருக்கு இந்த மார்பக கேன்சர் வந்தது. 2020ல் 100 பெண்களுக்கு 50 பேருக்கு மார்பக கேன்சர் வந்தது. இதற்கு காரணம் முன்பெல்லாம் வேகவைத்த உணவை சாப்பிட்டு வந்தனர். தற்போது துரித உணவுகள், புரோட்டா என அதிகம் சாப்பிட்டு வருவதால் இந்த நோய் தாக்கம் அதிகம் ஏற்படுகிறது. மற்றொரு காரணம் முன்பெல்லாம் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளுக்கு மேல் பெற்றார்கள். தற்போது ஒன்று அல்லது இரண்டுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். தாய்ப்பால் ஒழுங்காக கொடுக்காததால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
தாய்ப்பால் அதிகம் கொடுக்கும் பெண்களுக்கு இதன் தாக்கம் குறைவாக இருக்கும். மார்பக கேன்சருக்கு ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் தான் முக்கிய காரணம் . அதன் தூண்டுதல் காரணமாகத்தான் பெண்களுக்கு மார்பக வளர்ச்சி ஏற்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அதிக அளவு சுரந்தால் கேன்சர் வர வாய்ப்பு உள்ளது.
உடலில் உள்ள கொழுப்பு செல்களில் ஈஸ்ட்ரோஜன் அதிக அளவு சுரக்கும். உடல் பருமன் அதிகம் இருந்தால் அதிகம் கொழுப்பு சேரும். அதன் மூலம் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. மரபியல் காரணமாகவும் பத்து சதவீதம் வர வாய்ப்பு உள்ளது.
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எக்ஸ்ரே, மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். எக்ஸ்ரே மெமோகிராம் என்ற சோதனை இதற்கு சிறப்பான தேர்வாக கருதப்படுகிறது. தற்போது புதிய முறையில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
எந்த மரபணு மூலம் கேன்சர் வந்தது என்பதை கண்டறிந்து அதனை அழிப்பதற்கு டார்கெட் தெரபி என்ற புதிய சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத லுக்கிமியா போன்ற கேன்சரையும் குணப்படுத்த முடியும். அடுத்தது இம்யூனோதெரபி தெரபி, கேன்சர் செல்கள் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை தடுக்கும்.
புதிய சிகிச்சை மூலம் நோய் எதிர்ப்பு செல்களை அன் பிளாக் செய்து செல்களை செயல்பட வைக்கும். நம்முடைய எதிர்ப்பு சக்தி பூஸ்ட் செய்யப்பட்டு கேன்சர் செல்களை தடை செய்யும் இந்த சிகிச்சை மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கப்பட்ட கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.
புதிதாக வந்துள்ள இந்த இம்யூனோதெரபி பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)