பால் பொருட்களைத் தவிர்த்து கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகள்!

calcium - rich foods except dairy products
calcium - rich foods except dairy productshttps://mydr.com

ம் உடலின் எலும்பு, நகம், பற்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்து கால்சியம் ஆகும். இந்த சத்தை நாம் முக்கியமாக பால் மற்றும் யோகர்ட், சீஸ், பட்டர் போன்ற பால் பொருள்களின் மூலம் பெறுகிறோம். லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் மற்றும் உணவுமுறை பழக்க வழக்கம் காரணமாகவும் சிலர் பால் பொருட்களைத் தவிர்த்து அதற்கான மாற்று உணவுகளை எடுத்துக்கொள்வர். அதுபோன்ற உணவுகளில் எவற்றில் எல்லாம் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

* காலே, கொலார்ட், போக் சோய், டர்னிப் போன்ற இலைக் காய்கறிகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

* சோயா பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் செரிவூட்டப்பட்ட டோஃபுவில் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது.

* சர்டைன்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட சால்மன் மீன்களின் மிருதுவான, உண்ணக்கூடிய எலும்புகளில் கால்சியம் அதிகம் உள்ளது.

* பாதாம் பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் கால்சியமும் அதிகம் உள்ளது.

* சியா விதைகளில் மற்ற ஊட்டச் சத்துக்களுடன் கால்சியமும் அதிகம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் வீட்டை ‘குளுகுளு’வென வைத்திருப்பது எப்படி?
calcium - rich foods except dairy products

* ஒரு கப் சமைத்த கொலார்ட் இலைகளில் சுமார் 266 மில்லி கிராம் கால்சியம், அரைக் கப் டோஃபுவில் சுமார் 253 மில்லி கிராம் கால்சியம், ஒரு முறை பரிமாறப்படும் எலும்புடன் கூடிய சால்மன் மீனில் சுமார் 232 மில்லி கிராம் கால்சியம், ஒரு அவுன்ஸ் பாதாமில் சுமார் 76 மில்லி கிராம் கால்சியம், இரண்டு டேபிள் ஸ்பூன் சியா விதைகளில் சுமார் 179 மில்லி கிராம் கால்சியம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கால்சியம் சத்து தேவை இருக்கும் அனைவரும் அவரவர் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மேற்சொன்ன உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு ஆரோக்கியம் நிறைந்த நகம், எலும்பு மற்றும் பற்களையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com