குழந்தைகளுக்கு டயபர் போடுவதில் உள்ள ஆபத்துகள் தெரியுமா?

The dangers of wearing diapers on babies
The dangers of wearing diapers on babies
Published on

ற்போது உள்ள காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு டயபர் போட்டு விடுவது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய வசதியாக உள்ளது. பொது இடங்களுக்கு குழந்தையை கூட்டிச் செல்லும் போது, பெற்றோர் மற்றும் குழந்தை இருவருக்குமே அசௌகரியம் ஏற்படாமல் இருக்க டயபர் மிகவும் உதவுகிறது. என்றாலுமே கூட டயபரை குழந்தைகள் அதிக நேரம் போட்டுக் கொண்டிருப்பதால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பொதுவாக. குழந்தைகளுக்கு Cloth napkin போடுவதே நல்லது. ஏனெனில், இதை துவைத்து வெயிலில் காய வைத்து மறுபடியும் பயன்படுத்திக்கொள்ள முடியும். பச்சிளம் குழந்தைகளுக்கு Cloth napkin பயன்படுத்தும்போது 2 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். இதுவே, 5 மாத குழந்தைகளாக இருந்தால் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். இது டயபருக்கும் பொருந்தும்.

குழந்தைகளுக்கு பொதுவாக Super absorbent gel diaperஐதான் பயன்படுத்துகிறோம். இதுவே ஈரத்தன்மையை உறிஞ்சிக்கொள்ளும். டயபரை Cellulose மற்றும் Synthetic polymer வைத்து தயாரிக்கிறார்கள். டயபர் பயன்டுத்தும்போது, அதில் குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது பெரிதும் பிரச்னை ஏற்படுவதில்லை. இதுவே, குழந்தைகள் மலம் கழித்து விட்டால், Faecal urease பிரச்னை ஏற்படும். மலத்தில் உள்ள Urease என்னும் என்சைம் சருமத்தை அரிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகளுக்கு Diaper dermatitis என்ற புண் ஏற்படும். எனவே, குழந்தைகளுக்கு டயபர் போட்டுவிட்டு சரியாக பராமரிக்காதது Rashes, புண் வருவதற்கான காரணமாக அமைந்துவிடும்.

குழந்தைகளுக்கு டயபர் போடுவதற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெய், zinc oxide rash cream போன்றவற்றை போட்டுவிட்டு பிறகு டையபர் போட்டுவிடுவது குழந்தைகளுக்கு புண் ஏற்படாமல் தடுக்க உதவும். குழந்தைகளுக்கு Rashes, புண்கள் வந்துவிட்டால், கட்டாயம் குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்டுவது அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்டதும் சோடா மற்றும் குளிர்பானம் குடிப்பது ஜீரணத்திற்கு உதவுமா?
The dangers of wearing diapers on babies

குழந்தைகள் மலம் கழித்துவிட்டால், அதை சுத்தம் செய்வற்கு காட்டன் துணியை வைத்து ஒத்தி எடுக்க வேண்டுமே தவிர அழுத்தம் கொடுத்து சருமத்தில் தேய்க்கக் கூடாது. அதுவே குழந்தைகளுக்கு புண்கள் வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். Alcohol based டயபரை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சில குழந்தைகளுக்கு டயபர் பயன்படுத்தினாலே, புண் வரும். அவர்களுக்கு டயபர் போடாமல் தவிர்ப்பது நல்லதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com