
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் இருக்கும் வீட்டு பெரியவர்கள் குழந்தை அழுதாலே அந்த பெண் உருளைக்கிழங்கு, வெங்காயம், காலிபிளவர், முட்டைகோஸ், காரம் போன்ற உணவுகளை சாப்பிட்டதால்தான், தாய்பால் மூலம் அது பரவி, குழந்தைத்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்வார்கள். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாகவே கிழங்கு வகைகள், பயறு வகைகள் இவற்றிலெல்லாம் வாயுவை உற்பத்தி செய்யக்கூடிய Fructo oligo disaccharides என்னும் மாவுச்சத்துக்கள் இருப்பது உண்மை தான். ஆனால், அதை நாம் சாப்பிடும் போது, நம் வயிற்றில் அது செல்லும் போது, சில பாக்டீரியாக்கள் அதை Process செய்யும் போது, disaccharides இல் இருந்து வாயு உற்பத்தியாகி வாயுத்தொல்லை உருவாகும்.
ஆனால், இந்த Fructo oligo disaccharide நேரடியாக ரத்தத்தில் கலந்து தாய்ப்பாலில் சுரப்பதில்லை. அது நம் வயிற்றிலேயே Break down ஆகி Glucose என்னும் சர்க்கரையாக மாறி தான் ரத்தத்தில் கலக்கிறது. அது தாய்ப்பாலில் Lactose என்னும் சர்க்கரையாக மாறி தான் தாய்ப்பாலில் சுரக்கும். ஆகவே, உருளைக்கிழங்கு, பச்சை பயறு போன்றவற்றில் இருந்து வாயு உற்பத்தி செய்யும் சர்க்கரை வகை நேரடியாக தாய்ப்பாலில் சுரப்பதில்லை. இதெல்லாம் வேறு வகையாக உருமாறி தான் தாய்ப்பாலில் சுரக்கிறது. எனவே, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை வீட்டில் அதை சாப்பிடக்கூடாது என்று சொன்னால் அதை கேட்க தேவையில்லை. ஆனால், அதிகப்படியான காரம் வேண்டுமானால் தவிர்க்கலாம்.
ஏனெனில், மிளகாயில் உள்ள Capsaicin என்னும் ரசாயனம் சில சமயம் தாய்ப்பாலில் சுரக்கலாம். அது சிலசமயங்களில் குழந்தைகளுக்கு அசௌகரியத்தைக் கொடுக்கலாம். தினமும் 4 முதல் 5 காபி வரை குடிக்கும் போது அதிலிருக்கும் Caffeine தாய்ப்பாலில் இருந்து சுரந்து குழந்தையின் தூக்கத்தை குறைக்கலாம்.
இதை தவிர பெரும்பாலும் அம்மாக்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் நேரடியாக குழந்தைகளுக்கு செல்வதில்லை. அதனால் அம்மாக்கள் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வாயு உற்பத்தி செய்யும் என்ற காரணத்தால் எதையும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)