கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும் காபி?

liver inflammation
liver inflammation
Published on

காபி, உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்று. அதன் தனித்துவமான சுவைக்காகவே பலர் இதை அன்றாடம் அருந்துகின்றனர். ஆனால், காபியின் நன்மை தீமைகள் குறித்து பலருக்குத் தெரிவதில்லை. குறிப்பாக, கல்லீரல் நோயாளிகள் காபி அருந்துவது பாதுகாப்பானதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கல்லீரல் வீக்கம், கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கும் ஒரு பொதுவான நோயாகும்.‌ இந்தப் பதிவில் கல்லீரல் வீக்க நோயாளிகள் காபி குடிப்பதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து பார்க்கலாம்.‌ 

கல்லீரல் என்பது நம் உடலின் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. இது புரதத்தை உற்பத்தி செய்வது, நச்சுப் பொருட்களை நீக்குவது, செரிமானத்திற்கு உதவுவது போன்ற முக்கியமான செயல்பாடுகளைச் செய்கிறது.‌ கல்லீரல் வீக்கம் என்பது கல்லீரலின் செல்கள் வீங்கி, அதன் செயல்பாடு பாதிக்கும் ஒரு நிலை. இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல், வைரஸ் தொற்று, மரபணு, மது அருந்துதல் போன்றவை இதற்கு முக்கிய காரணிகளாகும். 

காபியின் நன்மைகள்: காபியில் பல நன்மைகள் உள்ளன. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை எதிர்த்து போராட உதவுகின்றன. மேலும், காபி நரம்பு மண்டலத்தைத் தூண்டி உடல் மற்றும் மன ஆற்றலை அதிகரிக்கிறது. சில ஆய்வுகள் காபி குடிப்பது நீண்ட ஆயுளைக் கொடுத்து, டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது என்று கூறுகின்றன.  

காபி Vs கல்லீரல்: காபி, கல்லீரலில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காபி, கல்லீரல் நோயாளிகளுக்கு பாதுகாப்பானது என சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இது கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக காபி குடிப்பது கல்லீரல் நோய்களின் என்சைம் அளவைக் குறைத்து கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.‌ 

இதையும் படியுங்கள்:
பேப்பர் கப்பில் டீ, காபி அருந்துவதில் ஒளிந்திருக்கும் 6 ஆபத்துகள் தெரியுமா?
liver inflammation

காபி குடிப்பதால் மட்டுமே கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்த முடியாது என்றாலும், இது சில நன்மைகளை வழங்கலாம். ஆனால், அனைத்து கல்லீரல் நோயாளிகளுக்கும் காபி பாதுகாப்பானதாக இருக்காது. கல்லீரல் நோயின் தீவிரம் மற்றும் காரணம் ஆகியவற்றைப் பொறுத்து காபியின் தாக்கம் மாறுபடும். எனவே, காபி கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், சில ஆய்வுகள், காபி, கல்லீரல் நோயாளிகளுக்கு நன்மைகளை வழங்கும் என்று கூறுவதால், மருத்துவரின் ஆலோசனைப்படி அதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com