இரவு உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யலாமா? 

exercise after dinner
exercise after dinner
Published on

இன்றைய நவீன கால உலகில் உடல் நலத்தை பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்காக பலர் உடற்பயிற்சியை தங்களது தினசரி வாழ்வில் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்கின்றனர். ஆனால், எப்போது உடற்பயிற்சி செய்வது என்பது குறித்த கேள்வி பலருக்கு எழுகிறது. குறிப்பாக, இரவு உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்வது நல்லதா என்பது பற்றிய குழப்பம் பலருக்கு இருக்கிறது. அதற்கான பதிலை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

உடற்பயிற்சி என்பது நம் உடல் நலத்திற்கு மிகவும் அவசியமானது. இது நம் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். மேலும், உடற்பயிற்சி நல்ல தூக்கத்தைக் கொடுத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். 

இரவு உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்வது, செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். இதனால், உணவு விரைவாக ஜீரணிக்கப்பட்டு வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும். இரவு உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்வது கலோரிகளை அதிகமாக எரிக்க உதவும். மேலும், லேசாக உடற்பயிற்சி செய்தால் தூக்கத்தை தூண்டி, மன அழுத்தம் குறைந்து தூக்கமின்மை பிரச்சனை சரியாகும். உடற்பயிற்சி செய்வதால் என்டார்பின் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன் வெளியாகி மனநிலையை மேம்படுத்தும். 

இரவு உணவுக்குப் பிறகு கடுமையான உடற்பயிற்சி செய்வது அஜீரணத்தை ஏற்படுத்தி, சிலருக்கு வயிற்று வலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிலருக்கு உடற்பயிற்சி செய்வது தூக்க குழப்பத்தை ஏற்படுத்தி, இரவில் தூக்கம் வராமல் தடுக்கும் வாய்ப்புள்ளது. உணவுக்குப் பிந்தைய உடற்பயிற்சியால் இதயத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி, இதய நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
தினசரி எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது தெரியுமா? 
exercise after dinner

எப்போது உடற்பயிற்சி செய்வது நல்லது? 

காலை வேளையில் உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஆற்றல் அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். இதுவே, மதிய நேரத்தில் உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானது. இரவில் உணவுக்கு 3-4 மணி நேரத்திற்கு முன்பு லேசான உடற்பயிற்சி செய்வது நல்லது. 

இரவு உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்வது நன்மை தரும் என்றாலும், எப்படி உடற்பயிற்சி செய்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இரவில் உடற்பயிற்சி செய்தால் கடுமையான உடற்பயிற்சியை தவிர்த்து லேசான உடற்பயிற்சியை செய்வது நல்லது. மேலும், தனி நபரின் உடல்நிலை, வயதுக்கு ஏற்ப உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com