தினசரி முந்திரி சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?

cashews
cashews
Published on

முந்திரிப் பருப்பு பரவலாக இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இதில் நிறைந்திருக்கும் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றன. ஆனால், தினசரி முந்திரியை சாப்பிடுவது நல்லதா? அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்? என்பது பற்றி பலருக்குத் தெரிவதில்லை. வாருங்கள் இந்தப் பதிவில் அதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளலாம்.

முந்திரிப் பருப்பில் கொழுப்பு அமிலங்கள் குறிப்பாக மோனோசச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், இதில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், துத்தநாகம் போன்ற முக்கியமான வைட்டமின்களும், தாதுக்களும் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு அவசியமானவை. 

முந்திரியின் நன்மைகள்: 

முந்திரியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதய நோய்கள் வரும் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.‌ இதில் உள்ள மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுப்படுத்தி எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. 

முந்திரியில் உள்ள மக்னீசியம் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. இதில் நிறைந்து காணப்படும் விட்டமின் ஈ, சருமத்தை பாதுகாத்து விரைவில் வயதாகும் தோற்றத்தைத் தாமதப்படுத்துகிறது. மேலும், இதன் நார்ச்சத்து உள்ளடக்கம் நீண்ட நேரம் பசி எடுப்பதைத் தடுத்து உடல் எடையைக் குறைக்க உதவும். 

முந்திரியின் தீமைகள்: 

முந்திரியில் கலோரி அளவு அதிகமாக இருப்பதால், அதிக அளவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. சில நபர்களுக்கு முந்திரி சாப்பிடுவதால் ஒவ்வாமை இருக்கலாம். எனவே, அத்தகையவர்கள் முந்திரி சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.  இதில் ஆக்சிலேட் அதிகமாக இருப்பதால் சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் முந்திரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முந்திரியில் உள்ள டைரமைன் மற்றும் ஃபைனிலெதிலமைன் அமிலங்கள் சிலருக்கு அதிக தலைவலியை ஏற்படுத்தலாம். 

இதையும் படியுங்கள்:
தினசரி உணவுடன் வெள்ளரி விதைகளை சேர்த்து உண்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!
cashews

தினசரி எவ்வளவு முந்திரி சாப்பிடுவது ஆரோக்கியமானது? 

ஒரு ஆரோக்கியமான நபர் தினசரி 30 கிராம் முந்திரி சாப்பிடுவது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், உங்கள் உடல்நிலை வயது மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடலாம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். 

என்னதான் முந்திரிப் பருப்புகள் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள் என்றாலும், அவற்றை மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது. உங்களது உடல்நிலை குறித்து நன்கு அறிந்துகொண்டு, ஏற்ற அளவை தீர்மானித்து முந்திரிப்பருப்பை சாப்பிடுங்கள். இது உங்களை என்றும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com