ஸ்வீட்டின் மேல் ஒட்டியிருக்கும் சில்வர் பேப்பரை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமா?

Is silver paper pasted on sweets healthy?
Is silver paper pasted on sweets healthy?
Published on

நாம் கடைகளில் இருந்து வாங்கும் இனிப்புப் பண்டங்களில் சில்வர் போன்ற கோட்டிங் இருப்பதை கவனித்திருப்போம். இதை வெறும் அலங்காரத்திற்காக மட்டும்தான் பயன்படுத்துகிறார்களா? இதைப் பயன்படுத்துவது உடலுக்கு ஆரோக்கியமானதுதானா? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இனிப்புப் பண்டங்களின் மேல் பயன்படுத்தப்படும் கோட்டிங் போன்ற சில்வர் தாளை அழகுக்காகவும், பார்க்கும்போது வாங்கி சாப்பிடத் தூண்டுவதற்காகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த சில்வர் பேப்பரின் பெயர் Vark silver leaf ஆகும். இது வெள்ளி மற்றும் தங்கம் இரண்டிலேயும் கிடைக்கும்.

இதைப் பயன்படுத்துவதால் ஸ்வீட் கெட்டுப் போகாமல் இருக்கும். மேலும், நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் போன்றவற்றை அழிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை இந்தியர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும், சருமப் பராமரிப்பிற்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், தற்போது சில்வர் ஃபாயிலுக்கு பதில் அலுமினியம் கலப்படமாகப் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியத்தில் இந்த ஃபாயில் செய்யப்படுவதால் விலை மலிவாக இருக்கும்.

அலுமினியம் ஃபாயிலை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது ஆகும். ஏனெனில், இது நம் மூளையை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதை சாப்பிடும்பொழுது அது அவர்களின் வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

ஸ்வீட்டில் பயன்படுத்தி இருப்பது அலுமினியம் ஃபாயிலா அல்லது சில்வர் ஃபாயிலா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழியுள்ளது. ஸ்வீட்டின் மேலே இருக்கும் சில்வரை எடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்துப் பார்க்கும்போது அது கையிலே கரைந்து போனால் அது சில்வர் ஃபாயில். இதுவே அது ஒரு உருண்டை பாலாக மாறினால் அலுமினியம் ஃபாயில் என்பதை சுலபமாகத் தெரிந்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!
Is silver paper pasted on sweets healthy?

மேலும், இந்த சில்வர் ஃபாயில் தூய்மையற்ற இடங்களில் செய்யப்படுகிறது. இந்த சில்வர் ஃபாயிலை மெலிதாக மாற்றுவதற்கு மாட்டினுடைய குடல் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதற்காக நவீன டெக்னாலஜியை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதுபோன்ற ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுப்பொருட்களை வாங்கி உண்பதைத் தவிர்ப்பது சிறந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com