புற்றுநோய் சிகிச்சையில் ஒரு மைல்கல்: நம்பிக்கை தரும் கொரிய கண்டுபிடிப்பு!

Cancer
Cancer
Published on

புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க அதிக பக்கவிளைவுகள் கொண்ட கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி இல்லாமல், புதிய வகை தொழில் நுட்பத்தினை கொரியர்கள் கண்டுபிடித்துள்ளனர் . இது புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்த கொரிய மேம்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (KAIST) ஆராய்ச்சியாளர்கள் குழு , புற்றுநோய்க்கு கதிர்வீச்சு இல்லாத புதிய மருத்துவ முறையை கண்டறிந்துள்ளனர்.

இதுவரை பயன்பாட்டில் உள்ள அனைத்து புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகளும் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த முறையில் கதீர்வீச்சின் மூலம் புற்றுநோய் செல்களை அழிப்பார்கள், அதில் நல்ல செல்களும் சேர்ந்து அழியும். ஆயினும் , உயிர் காக்கும் வேளையில் வேறு வழியில்லை.

ஆனால், புதிய கண்டுபிடிப்பின் படி புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுவது இல்லை. மாறாக புதிய சிகிச்சை முறையில் புற்றுநோய் செல்கள் நல்ல செல்களாக புதுப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு செல்கள் புதுப்பிக்கப்படுவாதால் பக்கவிளைவுகளும் இருப்பதில்லை.

அட்வான்ஸ்டு சயின்ஸ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, மருத்துவத் துறையில் ஒரு அதிசயமாக உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் கடுமையான கீமோதெரபி சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் செய்தியாக உள்ளது. கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு, புற்றுநோய் செல்களை அழிக்க நோக்கமாகக் கொண்டவை. ஆனால், கதிர்வீச்சுகள் குறிப்பிட்ட செல்களை மட்டும் இனம் கண்டு அழிக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
மிஸ் பண்ணிடாதீங்க! ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை! தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் வேலைவாய்ப்பு..!
Cancer

இதனால் , வழக்கமான புற்றுநோய் சிகிச்சைகள் மோசமான பக்க விளைவுகளை கொண்டுள்ளது. இந்த சிகிச்சை முறைகளின் பக்க விளைவுகள் கடுமையான வலியையும் , வேதனையையும் தரும். உடலையும் மிகவும் பலவீனமாக்கி விடுகிறது.

இந்த புதிய மருத்துவ முறையில் ஆச்சர்யமான ஒரு விஷயம் என்னவென்றால், இது புற்றுநோய் செல்களைக் கொல்லாது; நோய் பாதித்த செல்களை மீட்டு, அவற்றை புதுப்பிக்கிறது. இந்த முறையினால் புற்று நோய் செல்கள் அழியாமல் அவற்றின் நோய் தன்மை மட்டும் அகற்றப்படுகிறது.

இந்த செயல் முறையினால், எந்த ஒரு ஆரோக்கியமான செல்லும் பாதிக்கப்படாது. மோசமான எந்த பக்கவிளைவுகளையும் கொண்டிருக்காத இந்த மருத்துவ முறை பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

இந்த ஆய்வில் செல்லின் அடையாளத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் MYB, HDAC2 மற்றும் FOXA2 ஆகிய மூன்று குறிப்பிட்ட மரபணுக்களை அமைதிப்படுத்துவது, செல்களின் புற்றுநோய் தன்மையை மாற்றியமைக்க போதுமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் இந்த நுட்பம் விலங்குகள் மற்றும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட செல்கள் இரண்டிலும் பரிசோதிக்கப்பட்டு வெற்றி பெற்றது.

இந்த செயல்முறையில் சிகிச்சையளிக்கப்பட்ட பெருங்குடல் புற்றுநோய் செல்கள் இயல்பான செல்களாக மாறத் தொடங்கின. மேலும் எலிகளின் மீது பரிசோதிக்கப்பட்ட போது கட்டிகளின் அளவு கணிசமாகக் குறைந்திருந்தது. மீண்டும் மாற்றப்பட்ட செல்களின் மரபணு வெளிப்பாடு, தி கேன்சர் ஜீனோம் அட்லஸில் சேர்க்கப்பட்டுள்ள ஆரோக்கியமான திசு மாதிரிகளை நெருக்கமாக ஒத்திருந்தது. இது ஆய்வு முடிவுகளை உறுதி செய்தது.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..! வெள்ளிக்கு வரப்போகும் ஆப்பு...செப் 1ம் தேதி முதல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்..!
Cancer

இது எப்போது நடைமுறைக்கு வரும்?

பெருங்குடல் புற்றுநோயில் இந்த சிகிச்சை பலன் அளித்தாலும் அதன் சாத்தியங்களை மேலும் ஆராய வேண்டும். இந்த நுட்பத்தை மனித மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை. ஆரம்ப கட்ட புற்றுநோய்களில் இந்த மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால் மனிதர்களுக்கு சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும். இந்த சிகிச்சை முறை நடைமுறைக்கு வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com