உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்குக் காரணமாக, வைட்டமின் D மற்றும் மக்னீசியம் என்ற கனிமச்சத்து ஆகிய ஊட்டச் சத்துக்களின் குறைபாடு எனக் கூறப்படுகிறது. இக்குறைபாடுகள் நீங்கி, நம் உடல் மீண்டும் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் பெற நாம் உட்கொள்ள வேண்டிய, வைட்டமின் D மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அடங்கிய 5 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பசலைக் கீரை சாலட்: பசலை இலைகள், நறுக்கிய செரித்தக்காளித் துண்டுகள், வால்நட், ரோஸ்டட் சிக்கன் அல்லது டர்க்கி மற்றும் சர்டைன் மீன் துண்டுகள் ஆகியவற்றை கடாயில் போட்டுக் கலந்து டாஸ் செய்து சாலட் ட்ரெஸ்ஸிங்குடன் சாப்பிடலாம். இந்த உணவிலிருந்து அதிகளவு வைட்டமின் D மற்றும் மக்னீசியம் சத்து கிடைக்கும்.
2. பம்ப்கின் ராப் (Wrap): மஞ்சள் பூசணிக் காயைத் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ரோஸ்ட் செய்து எடுத்துக் கொண்டு அதனுடன் ஃபீட்டா சீஸ் (feta cheese), லெட்டூஸ், தக்காளி மற்றும் அவகாடோ பழத் துண்டுகளைக் கலந்து ராப் செய்து மதிய உணவாக உண்ணலாம். இந்த உணவிலிருந்து உடலுக்குத் தேவையான சத்துக்களும் சக்தியும் கிடைக்கும்.
3. சால்மன் கேஸ்ஸரோல் (Casserole): சால்மன் மீன் துண்டுகளை, புரோக்கோலி, வெங்காயம் மற்றும் முட்டையுடன் சேர்த்து கலந்து கேஸ்ஸரோலில் வைத்து சமைத்து இரவு உணவாக உட்கொள்ளும்போது வைட்டமின் D சத்துக்கள் நிறைந்த முழுமையுற்ற உணவாகும் அது.
4. காலே மற்றும் மாதுளை சாலட்: காலே கீரையுடன் அவகாடோ, பிஸ்தாச்சியோ, மாதுளம் பழ முத்துக்கள் மற்றும் தஹினி சாஸ் சேர்த்துக் கலந்து உட்கொள்ளும்போது நமக்குள்ளிருக்கும் மன அழுத்தம் முற்றிலுமாகக் குறைந்து புத்துணர்ச்சியும் அதிகளவு சக்தியும் கிடைக்கும்.
5. குயினோவா பௌல் (Bowl): ஒரு பௌலில் சமைத்த குயினோவா, ஆஸ்பராகஸ், அவகாடோ, கிவி ஃபுரூட் மற்றும் பூசணி விதைகளைக் கலந்து உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான மக்னீசியம் சத்து முழுவதுமாகக் கிடைத்துவிடும்.
மேற்கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு நம் உடல் சோர்வு மற்றும் மன அழுத்தமின்றி சுறுசுறுப்பாக இயங்க உதவுவோம்.