மலம் வராமலேயே வருவது போன்ற உணர்வா? உங்கள் குடல் சொல்லும் எச்சரிக்கை!

Tenesmus relief
tenesmus reliefImg credit: AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பொதுவாக ஒரு நாளைக்கு 3 முறை முதல் வாரத்திற்கு 3-4 முறை வரை மலம் கழிப்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பெரும்பாலானோருக்கு தினம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மலம் கழிப்பது இயல்பானது. உணவு முறை, நீர்ச்சத்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பொறுத்து இந்த எண்ணிக்கை நபர்களுக்கு நபர் மாறுபடும்.

அடிக்கடி மலம் வருவது போன்ற உணர்வு (Tenesmus) பெரும்பாலும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, குடல் அழற்சி நோய்கள், தொற்றுகள் அல்லது மன அழுத்தம் காரணமாக ஏற்படலாம். இது மலக்குடலில் உள்ள நரம்புகளின் தூண்டுதலால் ஏற்படுகிறது. சில நேரங்களில் மலம் இல்லாத போதும், இந்த உணர்வு வரும்.

முக்கிய காரணங்கள்: 

  • IBS (Irritable Bowel Syndrome):

    IBS என்பது நாள்பட்ட செரிமான கோளாறாகும் இது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது இரண்டிற்கும் இடையில் மாறி மாறி வருவது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். குறிப்பாக சாப்பிட்டவுடன் இந்த போக்கு காணப்படும்.

  • தொற்றுகள் (Infections): 

    பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணித் தொற்றுகள். 

  • மலச்சிக்கல் (Constipation):

    மலக்குடலில் மலம் தேங்கி நின்று அடிக்கடி வெளியேற்ற தூண்டுதலை ஏற்படுத்தும். 

  • உணவு ஒவ்வாமை (Lactose intolerance): 

    லாக்டோஸ் (பால் பொருட்கள்), குளுட்டன் பசையம் சகிப்புத்தன்மையின்மை. 

  • மன அழுத்தம் (Stress/Anxiety):

    உணர்ச்சி ரீதியான மன அழுத்தம் குடல் இயக்கத்தை அதிகரித்து, அடிக்கடி மலம் கழிக்க தூண்டும். 

  • அழற்சி குடல் நோய் IBD (Inflammatory Bowel Disease):

    கிரோன் நோய் (Crohn's disease) அல்லது அல்சரேட்டிவ் கோலிடிஸ் (Ulcerative colitis) போன்ற குடல் அழற்சி நோய்கள் குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, சில சமயம் ரத்தப்போக்குடன் கூடிய மலத்தை வெளியேற்றும். அதிகப்படியான தைராய்டு செயல்பாடு, மூல நோய், சில மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாகவும் அடிக்கடி மலம் வருவது போன்ற உணர்வு ஏற்படும்.

தீர்வு: 

  • மலத்தில் ரத்தம், காய்ச்சல், தொடர்ச்சியான எடையை இழப்பு அல்லது கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் இரப்பை குடல் நிபுணரை (Gastroenterologist) கலந்தாலோசிப்பது அவசியம்.

  • உணவு முறையில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும், அதிகமாக நீர் அருந்துவதும் மற்றும் காஃபின் (காபி, டீ), ஆல்கஹால் மற்றும் காரமான உணவுகளை தவிர்ப்பதும் அவசியம்.

  • தயிர் மற்றும் புரோபயாடிக் உணவுகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்தும்.

  • மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகா, தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

  • அடிக்கடி மலம் கழிப்பது உடல்நல பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் சுய மருத்துவம் செய்வதை தவிர்த்து, மருத்துவரை கலந்தாலோசித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com