தும்மலுக்கான காரணமும் அதைத் தவிர்ப்பதற்கான வழியும் தெரியுமா?

தும்மலுக்கான காரணமும் அதைத் தவிர்ப்பதற்கான வழியும் தெரியுமா?

தும்மல் எப்போது, யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. நொடியில் நின்று விடும் தும்மல் ஆரோக்கியமானதுதான். இந்தத் தும்மல் ஏன் வருகிறது என்று பார்த்தோமானால், தூசியைத் தட்டும்போது , அழுக்கு துணி மற்றும் பொருட்களை உதறும்போது, ஒட்டடை அடிக்கும்போது , மாசு படிந்த சாலையை கடக்கும்போது , சளி இருமல் காரணமாக ஒருவருக்கு தும்மல் வரும். இவை தவிர, காரப் பொருட்களை வதக்கும் போதோ அல்லது காரமான, சூடான உணவைச் சாப்பிடும் போதோ தும்மல் வரலாம்.

உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் தூசுகள், காரம் , கிருமிகள் போன்றவை மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் நுழையும்போது , ஹிஸ்டமைன் என்ற தும்மல் சுரப்பியை தூண்டும். இதனால் தும்மலின்போது நீர்த்துளிகளும் உடன் வெளியேறும். அது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதற்கு உண்டான செயல்தானே தவிர, நோய் கிடையாது. தும்மல் வரும்போது யாரும் அதை அடக்கக் கூடாது. அதுவே நோயாக மாறி  விடலாம்.

சுவாசத்தை பாதுகாக்க வழிகள்:

* தூசுகள் நிறைந்த இடத்திலிருந்து உடனடியாக வெளிவந்து விடுவதால் தும்மலைத் தவிர்க்கலாம்.

* பனி, மழை பெய்யும் பொழுதுகள், இளம் காலை பொழுதுகளில் வெளியே வருவதை தவிர்ப்பதால் தும்மலில் இருந்து தப்பிக்கலாம்.

* முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டு செல்ல, தூசு, மாசுகளினால் தும்மல், சளி வராது.

* மூக்கை பலமாக சிந்தக் கூடாது. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனால் மூக்கு அதிகமாக அடைத்துக் கொள்ளும்.

* அடிக்கடி மூக்கில் கை வைப்பது, சிந்துவதை நிறுத்த‌ வேண்டும். கர்ச்சீப் மற்றும் துணி முனையை மூக்கினுள் விடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

* மூக்குப் பொடி போடுவது கூடாது. ஜலதோஷம் மற்றும் மூக்கடைப்பின்போது மூக்கை சிந்தும் முன் கைகளை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும்.

* நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்களை எடுத்துக்கொள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

* சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவும் பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி , யோகாசனங்கள் நல்ல பலன்களைத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com