CBD Oil: மனநிலையை மேம்படுத்தும் Cannabidiol எண்ணெய்!

Cannabidiol எண்ணெய்
CBD Oil
Published on

கஞ்சா தாவரத்தில் இருந்து பெறப்படும் Cannabidiol எண்ணெய் அதன் பல்வேறு விதமான சிகிச்சை பண்புகளுக்காக பிரபலமானதாகும். கஞ்சா எண்ணெய் என்றவுடன் யாரும் பயந்து விட வேண்டாம். இது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். மருத்துவத்தில் இயற்கை வலி நிவாரணியாக இது பயன்படுத்தப்படுகிறது. இப்பதிவில் CBD எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. 

வலி நிவாரணம்: CBD எண்ணெய் அதன் வலி நிவாரணம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காகப் பெயர் போனது. இது உடலின் எண்டோ கன்னாபினாய்டு அமைப்புடன் தொடர்பு கொண்டு, வலி மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. உடலில் ஏற்படும் நாள்பட்ட வலியைப் போக்க இது பெரிதளவில் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

கவலை மற்றும் மன அழுத்தம் குறையும்: இந்த எண்ணெய் கவலை மற்றும் மன அழுத்தத்தின் அளவைக் குறைப்பதாக நம்பப்படுகிறது. இது மூளையில் உற்பத்தியாகும் மன அழுத்த ஹார்மோனைக் குறைத்து மனநிலை மற்றும் பதட்டத்தை ஒழுங்குபடுத்தும். அதிகமான கவலை, மனநலப் பிரச்சனை மற்றும் PTSD போன்ற அறிகுறிகளைப் போக்க CBD எண்ணெய் உதவும் என பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

தரமான தூக்கம்: இன்றைய காலத்தில் பல நபர்கள் தூக்கம் சார்ந்த பிரச்சினைகளுடன் போராடுகிறார்கள். தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த CBD எண்ணெய் சிறந்த தீர்வை வழங்குகிறது. இதன் அமைதிப்படுத்தும் பண்புகள் ஒருவருக்கு நல்ல தரமான தூக்கத்தை அடைய உதவும். மேலும் பயம், வலி போன்ற தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும் காரணிகளையும் இந்த எண்ணெய் நிவர்த்தி செய்யும். 

இதையும் படியுங்கள்:
கோடைகால அலர்ஜி பிரச்சனை நீங்க இவற்றைப் பின்பற்றினாலே போதும்! 
Cannabidiol எண்ணெய்

சரும பராமரிப்பு: CBD எண்ணெய் சரும பராமரிப்புக்கு பெரிதளவில் உதவும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், சரும பிரச்சனைகளைத் தீர்த்து முகப்பருக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதன் ஆக்சிஜனேற்றப் பண்புகள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி சருமத்திற்கு பளபளப்பை வழங்குகிறது. 

இதுதவிர மனச்சோர்வு போன்ற மனநலக் கோராறுகளை சரி செய்வதிலும் CBD எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்த முடிவெடுத்தால், இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள தகுந்த சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com