சப்பாத்தி Vs சோறு: ஆரோக்கியத்திற்கு எது நல்லது? 

Chapati Vs Rice
Chapati Vs Rice
Published on

இந்திய உணவில் தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரிசி மற்றும் கோதுமை இரண்டும் மிகவும் பிரபலமான தானியங்கள். அவை பல்வேறு வடிவங்களில் உட்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் சோறு மற்றும் சப்பாத்தி இரண்டும் அன்றாட உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இருப்பினும் இவ்வேண்டில் எது உடலுக்கு ஆரோக்கியமானது? என்ற கேள்வி எழுகிறது. எனவே இப்பதிவில் சப்பாத்தி மற்றும் சோறு இரண்டின் ஊட்டச்சத்து மதிப்புகளை ஒப்பிட்டு எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதைப் பார்க்கலாம்.

சப்பாத்தியின் ஊட்டச்சத்து மதிப்பு: சப்பாத்தியில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து செரிமானம் மற்றும் ரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். மேலும், சப்பாத்தியில் புரதம், வைட்டமின் பி, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற விட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. 

சோற்றின் ஊட்டச்சத்து மதிப்பு: சோற்றிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. நார்ச்சத்தைப் பொறுத்தவரை சப்பாத்தியை விட சோற்றில் குறைவாகவே இருக்கிறது. மேலும் சிறிதளவு புரதம், வைட்டமின் பி, நியாஸின் மற்றும் தயமின் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சோற்றில் நிறைந்துள்ளன. 

எது சிறந்தது? 

சப்பாத்தி மற்றும் சோறு இரண்டுமே ஓரளவுக்கு சரிசமமான ஊட்டச்சத்து மதிப்பையே கொண்டிருந்தாலும். சப்பாத்தியில் சோற்றை விட அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமான அமைப்புக்கு நல்லது மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உட்கொள்ள விரும்புபவர்கள் சப்பாத்தி தாராளமாக சாப்பிடலாம். 

சப்பாத்தியின் கிளைசெமி குறியீடு சோற்றை விட குறைவு. GI என்பது உணவு ரத்த சர்க்கரை அளவை எவ்வளவு விரைவாக உயர்த்துகிறது என்பதைக் குறிக்கிறது. குறைந்த GI உணவுகள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி சிறந்தது. 

இதையும் படியுங்கள்:
இப்படி சப்பாத்தி செஞ்சா 2 நாள் ஆனாலும் Soft-ஆ இருக்கும்! 
Chapati Vs Rice

சப்பாத்தி மற்றும் சோறு இரண்டிற்கும் தனித்துவமான சுவை உள்ளது. எனவே உங்களது ஊட்டச்சத்து தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து எது வேண்டுமானாலும் தேர்வு செய்து சாப்பிடலாம். இருப்பினும் சோற்றை விட சப்பாத்தியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சப்பாத்தி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. எனவே மூன்று வேளையும் சோறு மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, இரவில் சப்பாத்தி சாப்பிடுவது உங்களுக்கு எல்லா விதங்களிலும் நன்மை பயக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com