செர்ரி பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்; ஏன் தெரியுமா?

செர்ரி பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்; ஏன் தெரியுமா?
https://www.abc.net.au

ரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பண்புகள் நிறைந்துள்ள பழங்களில் ஒன்று செர்ரி. இதில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் உட்பட பல்வேறு சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கிறது. செர்ரி பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் இளைமையை புதுப்பித்து, ஆரோக்கியமான வாழ்நாளை அதிகரிக்க உதவுகிறது. இதிலுள்ள போலிக் அமிலம் இரத்தசோகையை தடுக்கிறது. இப்பழத்தில் இருக்கும் போரான், இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் எலும்பு மண்டலத்தின் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது.

செலினியம், குயிர் சிட்டின், ஃபிளாவோனாயிட்ஸ், எலசிக் அமிலம், நார்ச்சத்து, மாவுச்சத்து போன்ற சத்துக்கள் உடலின் இளமையை பாதுகாக்கும். தினமும் மூன்று செர்ரி பழங்களைச் சாப்பிட்டால் போதும் உடலுக்கு போதுமான வைட்டமின் சி சத்து கிடைத்துவிடும்.

நரம்புக் கோளாறுகள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் அடிக்கடி செர்ரி பழம் எடுத்துக்கொள்வது நல்லது. இது நரம்புகளில் உண்டான இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.

செர்ரி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதில் தாமிரம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, எந்த ஒரு நோயும் உடலை தாக்காதவாறு ஒரு அரணாகப் பாதுகாக்கும்.

செர்ரி பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஈ சத்தானது கண் பார்வை குறைபாடு, கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்னைகள் வராமல் பாதுகாக்கிறது. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி செர்ரி பழங்களை எடுத்துக்கொள்வது கண்களுக்கு நல்லது.

இதையும் படியுங்கள்:
சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?
செர்ரி பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்; ஏன் தெரியுமா?

பலருக்கு தலைமுடி கொட்டுதல், பொடுகுத்தொல்லை, தலைமுடி ஈரப்பதம் இல்லாமை போன்ற பல பிரச்னைகளால் தலைமுடி உதிர்ந்து விடுகிறது. இதற்கு செர்ரி பழங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இதில் தலைமுடிக்கு தேவையான வைட்டமின் எ மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால் தலைமுடியை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.

இன்சோம்னியா எனப்படும் தூக்கக் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை செர்ரி பழ ஜூஸ் மூலம் குணப்படுத்தலாம் என்று நியூயார்க் ரோசஸ்டர் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்திற்கு துணை புரியும் ‘டிரிப்டோபான்’ என்ற அமினோ அமிலத்தை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பொருள் செர்ரி பழத்தில் உள்ளதே இதற்குக் காரணம். மெலடோனின் உள்ள இயற்கையான உணவு ஆதாரங்களில் செர்ரி வகைகளும் ஒன்று. செர்ரிகளை நேரடியாக சாப்பிடுவது அல்லது சாறாக அருந்துவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதுடன், நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவுகிறது.

செர்ரி ஜூஸ் தசை மற்றும் உடல் வலியைப் போக்க உதவுகிறது. தினசரி மூன்று செர்ரி பழங்கள் சாப்பிட, ஆர்த்ரைடிஸ் வலிகளை குறைக்கும். இதற்கு அதிலுள்ள பைடோ கெமிக்கல்கள் உதவுகின்றன.

செர்ரி பழங்கள் ஆரோக்கியமானவைதான். ஆனால், அதற்காக அதை அளவுக்கதிகமாக சாப்பிடக் கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று செர்ரி பழங்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது. செர்ரி பழங்களை அதிகமாக சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com