ஆண் குழந்தைகளை அதிகம் தாக்கும் திக்குவாய்! பெற்றோர்களே உஷார்!

குழந்தைகளின் திக்குவாய் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? எப்போது பேச்சுப் பயிற்சி அவசியம்? பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு குறித்து முழுமையாக அறியுங்கள்.
children stuttering
children stuttering Image credit: AI Image
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on

குழந்தைகள் கோர்வையாக பேச தெரியவில்லை என்றால் அல்லது திக்கித் திணறி பேசினால் இதனை திக்குவாய் (children stuttering) என்கிறோம். அவர்கள் ஒவ்வொரு வார்த்தையும் யோசித்துப் பேசும்போது திணறல் அல்லது திக்குதல் ஏற்படலாம். குழந்தை வளர வளர பேச்சுத்திறன் முழு வளர்ச்சி அடையும் போது இந்த பிரச்சனை தானாகவே சரியாகும். இதை டெவலப்மெணடல் டிஸ்ப்ளுவென்சி என்று சொல்வார்கள்.

பொதுவாக, இரண்டு மூன்று வயது உடைய குழந்தைகள் இடையே இந்த வகை பேச்சுத் திணறல் ஏற்படும். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளிடம் நான்கு மடங்கு அதிகம் காணப்படும். இந்த பிரச்சனை பெற்றோருக்கு பேச்சு திணறல் இருந்தால் அதன் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படும்.

ஒரு வார்த்தையின் முதல் ஒலியை திரும்பத் திரும்ப சொல்வது; வார்த்தைகளை திரும்பத் திரும்ப பேசுவது; வார்த்தைகளுக்கு இடையே நீண்ட இடைவெளி ஒரு வார்த்தைக்கு பதிலாக வேறு வார்த்தை பேசுவது; பேசும்போது கண் இமைகளை சிமிட்டுதல்; முகத்தை சுருக்குதல் அல்லது பெருமூச்சு விடுதல் குழந்தையின் மனநிலை பாதிப்புகள், மன அழுத்தம், மன இறுக்கம் இவை பேச்சுத் திணறலை அதிகப்படுத்தலாம்.

சில குழந்தைகள் திக்கி திக்கி பேசும் போது, அந்த குழந்தை மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

இதனால் மற்றவர்கள் முன் பேசுவதற்கு கூச்சப்படுவார்கள்.

சில குழந்தைகளின் கேலி பேச்சுக்கு ஆளாகி பள்ளி செல்வதை தவிர்ப்பார்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் செல்லப் பிராணிகளிடம் பேசும்போது குழந்தைகள் திக்குவது இல்லை; பாடும் போதும் குழந்தைகள் திக்குவது இல்லை.

இதையும் படியுங்கள்:
குழந்தை சரியா படிக்கலையா? காரணம் பற்களாகக் கூட இருக்கலாம்! யாரும் அறியாத அதிர்ச்சி தகவல்!
children stuttering

பேச்சுத் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் நல்ல அறிவுள்ள குழந்தைகளாக இருப்பார்கள். ஐந்து வயதிற்கு மேல் இந்த குறைபாடு காணப்பட்டால், ஆட்டிசம் கற்றல் குறைபாடு எனப்படும் இயல்புக்கு மாறாக அதீத சுறுசுறுப்பு, செவித்திறன் குறைபாடு போன்ற பாதிப்புகளுடன் திக்குவாய் பிரச்சனையும் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

குழந்தைகள் மருத்துவரிடம் சென்றால் அவர் தகுந்த ஆலோசனைகள் வழங்குவார். பேச்சு பயிற்சியாளர் மூலம் பேச்சு பயிற்சி அளிக்கப்படும். தாமதிக்காமல் பேச்சுப்பயிற்சி ஆரம்பித்தால் நல்ல பலனை தரும்.

குழந்தைகளுக்கு மன அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்கித் தர வேண்டும். இது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்.

பிற குழந்தைகளோடு பேசவும், பழகவும், விளையாடவும் ஊக்கமளிக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் குழந்தையின் மன தைரியத்தை அதிகரிப்பது அவசியமாகும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com