நம் அன்றாட உணவில் காரசாரமான உணவிற்கு முக்கியக் காரணமாக இருப்பது மிளகாய்தான். மிளகாயில் ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடை மிளகாய் என பல வகைகள் உள்ளன. இவை அனைத்தும் காரத் தன்மையால் வேறுபடுகின்றன.
செயல்திறன் மிக்க வேதிப் பொருட்கள் இத்தாவரத்தில் அதிகம் உள்ளது. ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள் என பல உள்ளன. எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கேப்சைசிடின்ஸ், விதைகள் என இவற்றை வகைப்படுத்தலாம்.
மிளகாய் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கும் அவற்றை சரி செய்து உடலுக்கு நன்மை தரும். பெரியவர்களுக்கு உண்டாகும் தசை வலி, வீக்கத்தைப் போக்கும் தன்மை கொண்டது.
வரமிளகாய் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. இது உடலில் வியர்வையை அதிகம் வெளியேற்றும். இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலை சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகிறது. உடலுக்கு சராசரியான வெப்பத்தை அளித்து நன்மை தருகிறது.
சரும வியாதியான சொரியாசிஸ் மற்றும் தலைவலி , மூட்டுவலி ஆகியவற்றையும் இது குணமாக்குகிறது. பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாப்பிடும் போது வரும் வயிற்று வலி, வாயு பிரச்னைகள் தீரும். ஜீரண சுரப்பிகள் நன்கு சுரப்பதற்கு மிளகய் உதவுகிறது.
அளவாக சாப்பிட மிளகாய் சிறந்த வலி நீக்கியாகவும், சிலருக்கு தூக்கத்தைத் தர வல்லதாகவும் செயல்படுகிறது. தசைப் பிடிப்பை சரி செய்து தசைகள் நன்கு செயல்படவும் உதவுகிறது.