காபி பிரியர்களே, உஷார்! உஷார்!

Coffee
Coffee
Published on

கடந்த வாரம்  நம் கல்கி குழும சமூக ஊடகத்திலிருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதவாது மக்கள் அதிகமாக காபியை விரும்புகிறீர்களா? டீ யை விரும்புகிறார்களா? என்று, அதற்கு அதிகமான மக்கள் காபியை விரும்புவதாகதான் கூறினார்கள். சிலர் டீ என்றும் கமெண்ட் செய்திருந்தார்கள்.

இதில், அதிகமான நபர்கள் காலையில் காபி பருகுவதாகவும், மாலையில் டீ பருவதாகவும் சமக்கொடி காட்டினார்கள். நேரில் பலரிடம் கேட்டபோதும் பலர் காபியை தான் தேர்வு செய்தனர். அப்போது நான் காபியை பற்றி தெரிந்துக் கொள்ள எண்ணி, சமூக ஊடகங்களை அலசினேன். அதிலிருந்து நான் தெரிந்துக் கொண்ட தகவலைதான் இந்த பதிவில், உங்களுக்கு எடுத்துரைக்க உள்ளேன்.

காபி குடிப்பதினால் அதிக நன்மைகள் இருக்கின்றன. ஆனால் எந்தஅளவு நன்மைகள் இருக்கிறதோ, அதேபோல் தீமைகளும் இருக்கின்றன. அதிக ஆபத்துகள் காபியில் இருப்பதாக கூறப்படுகிறது.

காபியில் உள்ள நன்மைகள்:

  • காபியில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றனவாம்.

  • கவனம், ஆற்றல் நிலை மற்றும் மனநிலை மேம்பாடு போன்றவற்றிற்கு காபி உதவியாக இருக்குமாம்.

மேலும், புற்றுநோய், வகை 2 நீரிழிவு, கல்லீரல் நோய் போன்ற இன்னும் சில அபாயங்களைக் குறைக்க இந்த பானம் உதவுவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வேர்க்கடலை சாப்பிடலையோ வேர்க்கடலை!
Coffee

காபியில் உள்ள தீமைகள்:

காபியில், நன்மைகள் இருந்தாலும், நமக்கு கேடு விளைவிக்கும் அபாயங்களும் அதில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது காபியில் உள்ள காஃபின் (Caffeine) நமக்கு அதிகஅளவில் தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது.

காபியில் உள்ள காஃபின் (Caffeine),

  • மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி, நமக்கிருக்கும் கவலையை அதிகரிக்குமாம்.

  • பதட்டம், அமைதியின்மை போன்ற அச்சுறுத்தும் உணர்வுகளை ஏற்படுத்துமாம்.

  • காஃபின், நம் உடலில் கார்டிசோல் (கார்டிசோல் என்பது மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்) அளவை அதிகரிக்குமாம். இது மன அழுத்தத்தை அதிகரிப்பதோடு, ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என கூறப்படுகிறது.

  • காபியை அளவுக்கு அதிகமாக உட்கொள்பவர்களுக்கு நடுக்கம், எரிச்சல் போன்றவை ஏற்படுமாம்.

  • காபியில் உள்ள காஃபின் அடினோசினைத் (அடினோசின் என்பது தூக்கத்தை ஊக்குவிக்க உதவும் ஒரு வகை இரசாயனமாகும்) தடுக்கிறது. இது தூக்கமின்மையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

எனவே இதிலிருந்து காபி மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என அறியப்படுகிறது. நாம் எந்த ஒரு உணவையும் அதிகமாக எடுத்துக் கொள்வதால்தான் பிரச்னை. 'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்று சும்மா கூறப்பட வில்லை அதனால், எதையும் அளவோடு எடுத்துக்கொண்டு ஆரோக்கியத்துடன் வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com