

கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவித நோய்கள் ஏற்படும். பொதுவான நோய்கள் என எடுத்துக் கொண்டால் அம்மை, சரும நோய், கண் நோய், சிறுநீர் பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுகின்றன. இந்த நோய்கள் ஏற்பட காரணம் அசுத்தமான நீர் மாசடைந்த காற்று மற்றும் சுகாதாரம் இல்லாத உணவுகள் போன்ற காரணங்கள் மூலம் ஏற்படுகின்றன.
அம்மை நோய் என எடுத்துக் கொண்டால் மணல் வாடி அம்மை விளையாட்டு, அம்மை சிக்கன் பாக்ஸ் போன்ற பல வகைகள் உண்டு.
இவை காற்றின் மூலம் பரவ கூடும் என்பதால் குழந்தைகள் வகுப்பறையில் நெருக்கமாக உட்காரக் கூடாது. சற்று இடைவெளி விட்டு உட்காரச் சொல்ல வேண்டும்.
தும்மல் மற்றும் இருமலின் போது குழந்தைகளுக்கு தொற்று ஏற்படக்கூடும்.
காய்ச்சல், இருமல், கண்கள் சிவந்து போவது, சரும அரிப்பு போன்றவை இவற்றின் அறிகுறிகள் ஆகும்.
சில சமயங்களில் வாந்தி வலிப்பு போன்றவையும் ஏற்படலாம்.
அம்மை நோய் வராமல் இருக்க தகுந்த வயதில் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். தட்டம்மை நோய்க்கு ஒன்பதாவது மாதம், 15 வது மாதம் மற்றும் ஐந்து வயதிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இவை தவிர பயிர் அமமை நோய்க்கு 15 மற்றும் 18வது மாதங்களில் தடுப்பூசி போட வேண்டும்.
வெயில் நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேர்க்குரு, வெப்ப கட்டிகள், புண்கள் ஏற்படும். இதனால் காய்ச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
இதனை தடுக்க தினசரி இரண்டு முறை குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் வெளியே விளையாடி விட்டு வந்த பின்னர் கை, கால் சுத்தம் செய்ய சொல்ல வேண்டும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர் போன்ற பானங்கள் அருந்த வேண்டும்.
வெயில் காலங்களில் குடையை பயன்படுத்துவது நல்லது.
வெள்ளை மட்டும் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும்.
கோடை காலத்தில் மெட்ராஸ் ஐ என்னும் கண் நோய் ஏற்படலாம்.
இவை தவிர கண் அரிப்பு, கண் எரிச்சல், கண் சிவந்து போவது போன்றவையும் ஏற்படும். அதிகம் கூட்டம் உள்ள இடங்களை தவிர்ப்பது நல்லது.
கைகளால் கண்களை தொடுவது, கசக்குவது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
கண் சம்பந்தப்பட்ட நோய் வந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி, சிறுநீர் பாதையில் வலி போன்றவை ஏற்படலாம். இந்த நேரத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஓ. ஆர். எஸ் கரைசலையும் அவ்வப்போது கொடுக்க வேண்டும். சிறுநீர் பிரச்சனை அதிகமாக இருந்தால் டாக்டரை பார்த்து சிறுநீர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இவ்வாறாக கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)