ஹெர்னியா பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்! 

hernia
Common symptoms of hernia!
Published on

ஹெர்னியா என்பது நம் உடலில் ஒரு பகுதியில் உள்ள தசை அல்லது திசு பலவீனம் அடைந்து, அதன் வழியாக உள் உறுப்புகள் வெளியேறி வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். இது பொதுவாக வயிற்றுப் பகுதியில் ஏற்படும் என்றாலும், உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படலாம். ஹெர்னியாவில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையின் அறிகுறிகளும் சற்று வேறுபடும். இந்தப் பதிவில் ஹெர்னியாவின் பொதுவான அறிகுறிகள் மற்றும் அதைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் அனைத்தையும் விரிவாகப் பார்க்கலாம். 

ஹெர்னியாவின் பொதுவான அறிகுறிகள்:

  • உடலில் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு கட்டி அல்லது வீக்கம் தென்படுவது ஹெர்னியாவின் மிகவும் பொதுவான அறிகுறி ஆகும். இது இருமும் போது பெரிதாகி, பின்னர் ஓய்வெடுக்கும் போது சிறியதாக மாறும். 

  • ஹெர்னியாவால் வீக்கம் இருக்கும் இடத்தில் மிதமான வலி ஏற்படக்கூடும். இது கனமான பொருட்களை தூக்கும்போது, இருமும்போது அதிகமாக இருக்கும். 

  • பாதிக்கப்பட்ட இடத்தில் ஏதோ ஒரு பிடிப்பு இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது நடக்கும்போது, உட்காரும்போது அதிகமாக உணரப்படும். 

  • சில சமயங்களில் ஹெர்னியா குடலின் செயல்பாட்டை பாதித்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

  • ஹெர்னியா பாதிப்பு கடுமையாக இருந்தால் குமட்டல் வாந்தி போன்றவை ஏற்படும். சிலருக்கு, மிகவும் அரிதாக, ஹெர்னியா பாதிக்கப்பட்ட பகுதியில் தோற்று ஏற்பட்டு, காய்ச்சல், சிவந்து போதல், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படலாம். 

ஹெர்னியா ஏற்படுவதற்கான காரணங்கள்: 

இடுப்பு பகுதியில் ஏற்படும் ஹெர்னியா, தொப்புள் ஹெர்னியா, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ஏற்படும் ஹெர்னியா, வயிற்றில் ஒரு பகுதி உணவுக் குழாய் வழியாக நுழைவதால் ஏற்படும் ஹெர்னியா என பல வகைகள் உண்டு. 

வயதானவர்களுக்கு ஹெர்னியா ஏற்படும் அபாயம் அதிகம். பிறப்பு குறைபாடு காரணமாக சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஹெர்னியா இருக்கும். தொடர்ந்து கனமான பொருட்களைத் தூக்குவது ஹெர்னியா ஏற்படுவதற்கு வழிவகுக்கும். 

மலச்சிக்கல் காரணமாக வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, ஹெர்னியா பாதிப்பு ஏற்படக்கூடும். நார்ச்சத்து குறைவான உணவுகளை உட்கொள்வதால், மலச்சிக்கல் ஏற்பட்டு ஹெர்னியா ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
பாம்பு கடித்ததும் சிகிச்சை எடுக்காமல் அதனை ஆராய்ச்சி செய்து இறந்த ஆராய்ச்சியாளர்!
hernia

சிகிச்சை: பொதுவாக, அறுவை சிகிச்சையின் மூலமாகவே ஹெர்னியாவுக்கு சிகிச்சை அளிப்பார்கள். அறுவை சிகிச்சையில் வெளியே வந்த உறுப்பை மீண்டும் அதன் இடத்தில் வைத்து பலவீனமான பகுதியை பலப்படுத்துவார்கள். சில சமயங்களில், மருந்துகள், உடற்பயிற்சிகள் மூலமாகவும் ஹெர்னியாவை கட்டுப்படுத்தலாம். 

உங்களுக்கு ஹெர்னியா தொடர்பாக ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். இதை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com