இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

Healthy cooking oils
Healthy cooking oils
Published on

தயத்தை பாதுகாப்பதில் சமையல் எண்ணெய்க்கு முக்கியப் பங்கு உண்டு. சில எண்ணெய்களில் அதிகப்படியான சாச்சுரேட்டட் கொழுப்புகள் அல்லது டிரான்ஸ் ஃபேட் உள்ளதால் இவை நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதய நோய்களை ஏற்படுத்தலாம். நாம் தேர்வு செய்யும் சமையல் எண்ணெயில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் இருந்தால் அது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெய்களின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சூரியகாந்தி எண்ணெய்: சூரியகாந்தி எண்ணெயில்  மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் E இருப்பதால்  இதய ஆரோக்கியம், நல்ல செரிமானம் மற்றும் சருமத்திற்குத் தேவையான போஷாக்கை வழங்குவதால் இது இதய நோயாளிகளுக்கு சிறந்த எண்ணெயாக கருதப்படுகிறது.

ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயில் அதிக வெப்ப நிலையில் சமைத்தாலும் இதில் உள்ள ஃபிளேவர் மற்றும் ஊட்டச்சத்து மாறாமல் இருப்பதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்புகளை உள்ளடக்கி உள்ளன. மேலும், ஆலிவ் எண்ணெயில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்துப் போராடி ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் உதவுகிறது. இந்த எண்ணெய் பொரிக்க, வறுக்க மற்றும் பேக்கிங் போன்றவற்றிற்கு ஏற்ற எண்ணெயாக உள்ளது.

கடலை எண்ணெய்: கடலை எண்ணெயில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் இதயத்தின் ஆரோக்கியத்தையும், கொலஸ்ட்ரால் அளவுகளையும் பராமரிப்பதால் எந்த ஒரு உணவையும் சமைப்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான மற்றும் இதயத்திற்கு உகந்த எண்ணையாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?
Healthy cooking oils

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்: எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்பதால் சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது. ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த எண்ணெய் ஃப்ரீ ரேடிக்கில்கள் காரணமாக ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்குவதோடு, ஆன்டி-ஏஜிங் விளைவுகளைக் கொண்டுள்ளதால் நமக்கு இளமையான சருமத்தையும் அளிக்கிறது. இதில் எந்தவிதமான ட்ரான்ஸ் ஃபேட் கிடையாது மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பும் மிக குறைவான அளவில் உள்ளது.

சிறந்த சமையல் எண்ணெய்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

சமையலில் அதிகமாக பொரித்தெடுக்க அல்லது கிரில் செய்ய அதிக புகை புள்ளி கொண்ட அவகாடோ எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். ஏனெனில், இந்த எண்ணெய்கள் அதிகப்படியான வெப்ப நிலையில் கூட உடையாமல் அப்படியே இருக்கின்றன. இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த ஆலிவ் எண்ணெய் கனோலா எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். எண்ணெய்கள் மூலமாக அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு சுத்திகரிக்கப்படாத மரச் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துவது அவசியம் என்பதோடு டிரான்ஸ் ஃபேட் மற்றும் சாச்சுரேட்டட் ஃபேட் அதிகமாக உள்ள எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com