Creatine என்பது ஒரு பிரபலமான சப்ளிமெண்ட் ஆகும். இது உடற்பயிற்சி செயல்திறன் மற்றும் தசை வளர்ச்சியை மேம்படுத்துவதில் அதிக நன்மைகளை வழங்குவதால் பாடி பில்டிங் மற்றும் தடகள துறையில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும் இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது மற்றும் அதன் பக்க விளைவுகள் குறித்து பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பதிவில் அதன் முழு உண்மைகளை நாம் தெரிந்து கொள்வோம்.
Myth 1: Creatine ஒரு ஸ்டெராய்டு.
உண்மை: கிரியேட்டின் ஒரு ஸ்டெராய்டு அல்ல. இது இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவுகளில் சிறிதளவு காணப்படும் ஒரு இயற்கையான கலவை. எனவே கூடுதலாக நாம் கிரியேட்டினை எடுக்கும்போது அதிதீவிர உடற்பயிற்சிகளின் போது நமது செயல்திறனை மேம்படுத்துகிறது.
Myth 2: கிரியேட்டின் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
உண்மை: சிறுநீரகங்கள் உள்பட ஆரோக்கியமான நபர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு கிரியேட்டின் கூடுதல் பாதுகாப்பானது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கிரியேட்டின் பயன்பாடு சிறுநீரக பாதிப்பு மற்றும் பலவீனமான சிறுநீரக செயல்பாடு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கான எவ்விதமான ஆதாரமும் இல்லை.
Myth 3: கிரியேட்டின் நீரிழப்பு மற்றும் தசைப்பிடிப்புகளை ஏற்படுத்தும்.
உண்மை: கிரியேட்டின் எடுத்துக் கொள்ளும்போது போதிய அளவு திரவம் உட்கொண்டால் நீர் இழப்பு அல்லது தசைப்பிடிப்பை ஏற்படுத்தாது. உண்மையில் கிரியேட்டின், தசை செல்களில் நீரை தக்க வைப்பதால், கிரியேட்டின் எடுக்கும்போது அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
Myth 4: கிரியேட்டின் பாடி பில்டர்களுக்கு மட்டுமே நல்லது.
உண்மை: கிரியேட்டின் பாடி பில்டர்களுக்கு மத்தியில் பிரபலமாக இருந்தாலும், அதை மற்ற துறையில் இருப்பவர்களும் பயன்படுத்தலாம். குறிப்பாக தடகள வீரர்கள் கிரியாட்டின் எடுப்பதால் அவர்களுக்கு கூடுதல் வலிமை கிடைக்கும்.
Myth 5: கிரியேட்டினை அனைவருமே பயன்படுத்தலாம்.
உண்மை: கிரியேட்டின் பொதுவாக அனைவருக்குமே பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்றாலும் அதன் தாக்கம் தனி நபர்களுக்கிடையே மாறுபடும். சில நபர்களுக்கு அதிக வலிமை மற்றும் நல்ல தசை வளர்ச்சி போன்ற குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு குறைந்த அளவிலான நன்மைகளை வழங்கலாம்.
Myth 6: கிரியேட்டின் எடை மற்றும் கொழுப்பை அதிகரிக்கிறது.
உண்மை: கிரியேட்டின் தசைகளுக்குள் நீரைத் தேக்குவதால் உடல் எடையில் சிறிய மாற்றம் ஏற்படும். இருப்பினும் இது நேரடி கொழுப்பு அதிகரிப்பை ஏற்படுத்தாது. சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைந்து பயன்படுத்தும்போது கிரியேட்டின் தசை வளர்ச்சியை அதிகரித்து உடல் அமைப்பை மேம்படுத்த உதவும்.
Myth 7: Loading Phase-ல் கிரியேட்டின் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உண்மை: தொடக்கத்தில் கிரியேட்டினை அதிகமாக எடுத்துக் கொண்டால் அதிக நன்மை கிடைக்கும் என எவ்விதமான அறிவியல் ஆதாரமும் இல்லை. எனவே தினசரி ஒரு ஸ்கூப் (3-5 கிராம்) எடுத்துக்கொள்வது போதுமானது.
கிரியேட்டின் என்பது தசை வளர்ச்சி மற்றும் செயல் திறனை மேம்படுத்த உதவும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சப்ளிமெண்ட் ஆகும். எனவே இதை நீங்கள் எடுத்துக்கொள்ள யோசித்தால், உங்களது தனிப்பட்ட தேவை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தகுந்த வல்லுனர்களுடன் ஆலோசித்த பிறகு எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே கிட்னி பிரச்சனைகள் மற்றும் சில மருத்துவ நிலைகள் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.