தொப்பை கொழுப்பை 5 வழிகளில் குறைக்கும் சீரகம்!

Cumin reduce belly fat
Cumin reduce belly fat
Published on

ம் வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை. அதில் மிகவும் முக்கியமானது சீரகம். சீர்+அகம்= சீரகம். உடலை சீர்படுத்துவதே இதன் நோக்கம். தொடர்ந்து சீரகத்தை பயன்படுத்தி வந்தால் இடுப்பு பகுதியில் உள்ள சதைகள் குறையும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. தொப்பை கொழுப்பை 5 வழிகளில் சீரகம் எப்படி குறைக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. சீரகப் பொடியுடன் தேன்: நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் அரை டீஸ்பூன் சீரகப் பொடியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தொப்பை கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் மூலக்கூறுகள் வளர்சிதை மாற்றத்தை தூண்டி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஒல்லியான தேகத்தை கொடுக்கின்றன.

2. மோரும் சீரகமும்: ஒரு கிளாஸ் மோரில், ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து, அதனை நன்கு அடித்து குடிப்பதால் தொப்பை கொழுப்பு குறைந்து செரிமானத்தை சீராக்குகிறது. இது உடல் எடையை குறைப்பதோடு மோர் குடல் ஆரோக்கியத்தை சீராகவும் வைத்திருக்கிறது.

3. சீரகப் பொடி மற்றும் யோகர்ட்: துளியளவு சீரகப் பொடியை, அரை கப் யோகர்ட்டில் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தொப்பை கொழுப்பு குறையும். சீரகத்தில் உள்ள மூலக்கூறுகள் வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் சீராக்குவதோடு யோகர்ட் குடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கும் என்பதால் தினமும் இரண்டு முறை இதை குடித்து வந்தால் தொப்பையே ஒரு நாள் காணாமல் போகும்.

இதையும் படியுங்கள்:
புற்றுநோய் வரும்முன் காக்க சில யோசனைகள்!
Cumin reduce belly fat

4. சீராக தண்ணீர்: ஒரு லிட்டர் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, அதனை நன்கு அடித்து  காலையில் அருந்த  உடல் எடை குறையும்.

5. எலுமிச்சை நீரில் சீரகப்பொடி: அரை டீஸ்பூன் சீரகப் பொடியை 1 கிளாஸ் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் சேர்த்து அதனை சுட வைத்து காலையில் தொடர்ந்து குடித்து வருவதால் தொப்பை கொழுப்பு எளிதில் கரையும்.

சீரகத்துடன் மேற்கூறிய ஐந்து பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் எளிதாக தொப்பை குறைந்து ஒல்லியான தேகத்தை பெறுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com