உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும் சீரக நீர்!

உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும் சீரக நீர்!

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரைக் குடித்து வருவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும். மேலும், பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கும் இயற்கை தீர்வாக இது அமைகிறது.

சீரகம் இந்திய சமையலறையில் இருக்கும் இன்றியமையாத ஒரு மசாலா பொருளாகும். உணவுக்கு சுவையும் மணமும் சேர்க்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சீரகம் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உட்பட பல்வேறு உடல் நலப் பிரச்னைகளுக்கும் நல்ல நாட்டு வைத்தியமாகும். சீரகத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் பிற இரசாயனங்கள் சீரகத்தில் நிறைந்துள்ளன. ஆய்வுகளின்படி சீரகத்தில் உள்ள டிரைகிளிசரைடுகள் கெட்ட கொழுப்பை எரிக்கும் தன்மை கொண்டவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், சீரகத்தில் நார்ச்சத்தும் உள்ளது.

எட்டு வாரங்களுக்கு வெறும் வயிற்றில் சீரக நீரை உட்கொள்வதால் அதிகப்படியான கொழுப்பை குறைக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு கொலஸ்ட்ரால் அளவை குறைக்க சீரக நீர் உதவுகிறது.

சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி?

ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர்  தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் அதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை தினமும் குடிக்கலாம். ஆனாலும், நீங்கள் சாப்பிடும் உணவில் மாற்றம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

சீரகத் தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஜீரண திரவங்கள் மற்றும் நொதிகளின் தொகுப்பு சீரக சீரகத் தண்ணீரைக் குடிப்பதன்  மூலம் தூண்டப்படலாம். மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொல்லை வீக்கம் போன்றவற்றுக்கும் சீரகம் நிவாரணம் அளிக்கும். சீரகம் எடை இழப்பை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றுகிறது. வளர்சிதை  மாற்றம் மூலம் கொழுப்பு எரிக்கப்படுவதால் உடல் எடை குறைவதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com