
சீதாப்பழத்தை சிலர் விரும்புவர். பலர் கொட்டை இருப்பதால் சாப்பிட தயங்குவர். ஆனால் இதில் உள்ள சத்துக்களையும், அது தரும் ஆரோக்கியத்தையும் தெரிந்து கொண்டால் பழம் சாப்பிடுவதை விட மாட்டோம்.
சீதாப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், புரதம், தாது உப்புகள், நீர்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளன. இவ்வளவு சத்து நிறைந்த சீதாப்பழமானது இதயம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க வல்லது.
சீதாப்பழம் இதய வால்வுகளில் உள்ள கொழுப்பை கரைத்து இதயநோய், இரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.
ரத்தசோகை, மந்தமாக இருக்கும் சத்து குறைந்த குழந்தைகளுக்கு சீதாப்பழத்தை தினமும் கொடுத்தால் அவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இருப்பார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மலச்சிக்கலை குணமாக்கி குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.
இதிலுள்ள தாமிர சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு ரெகுலராக கொடுத்து வர அது வயிற்றில் சுரக்கும் அமிலத் தன்மையை சரிசெய்து குழந்தைகளின் குடலை உறுதியாக்குகிறது.
கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து ஒரு சீதாப்பழத்தை சாப்பிட்டு வர அவர்கள் உடல் வலிமை அடைவதுடன் வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
சீதாப்பழம் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுத்து , புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் மலச்சிக்கலை கட்டுப்படுத்த உதவுகிறது.
சீதாப்பழத்தின் மரப்பட்டைகள் நீரிழிவு நோயைக் குணமாக்கும். இலைகள் நோய் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சி தரும். சீதாப்பழத்தை காசநோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு கொடுத்து வர நோய் கட்டுப்படும்.
இவ்வாறு பல நன்மைகள் கொண்ட சீதாப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்து நாமும் சாப்பிட, ஆரோக்கியம் மேம்படும்.