காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடுமையான வெயில் நாட்கள் அதிகரித்து மனிதர்கள் விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பல்வேறு வகைகளில் பாதிக்கிறது. இதுபோன்ற கடுமையான வெயில் எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடுமையான வெயிலில் வெளிப்படுவது உடல் நலத்திற்கு பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக, வெப்பச்சலனம் எனப்படும் உடலில் இருந்து அதிகப்படியான நீர் இழப்பு தலைசுற்றல், தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். அதேபோல உடல் வெப்பநிலை கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும். வெப்பக் கோளாறு காரணமாக, சருமம் சிவந்து போதல் மூச்சு வாங்குதல் குழப்பம் மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடுமையான வெயில் நீண்ட காலம் நீடித்தால் வறட்சி ஏற்பட்டு வேளாண்மை, நீர் ஆதாரங்கள் மற்றும் உயிரினங்கள் பாதிக்கப்படும். உண்மையான வெப்பம் காற்றின் ஈரப்பதத்தைக் குறைத்து காட்டுத் தீ ஏற்பட வழிவகுக்கும். அதிகப்படியான வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து, கடலோரப் பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
அதிகப்படியான வெயில் காரணமாக வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவோரின் உற்பத்தித் திறன் குறையும். அதிக வெப்பத்தால் வெப்பம் தொடர்பான நோய்கள் அதிகரித்து, சுகாதாரப் பிரச்சனைகளை உண்டாக்கும். வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்படும்.
தடுப்பு நடவடிக்கைகள்:
அதிகப்படியான வெயிலின் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள வெளியே செல்லும்போது தொப்பி அணிந்து கொள்ளுங்கள். கட்டாயம் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். முடிந்தவரை வெளியே சென்றாலும் நிழலில் இருந்தே செயல்படுங்கள்.
உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறையைப் போக்குவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தவரை கடுமையான வெயில் நேரங்களில் வெளிப்புற செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க ஏர்கண்டிஷனர் அல்லது மின்விசிறி பயன்படுத்தலாம். மரங்கள் நடுவது நிழலைத்தந்து வெப்பத்தைக் குறைக்க உதவும்.
கடுமையான வெயில் என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பல்வேறு வகைகளில் பாதிக்கிறது. இதன் விளைவாக உடல்நலப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படி, பல்வேறு விதங்களில் வெயில் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது.