ஆப்பிள் பழங்களை சுவைத்திருப்போம்; கொய்யா பழங்களின் சுவையையும் அனுபவித்திருப்போம். ஆனால், ஆப்பிள் மற்றும் கொய்ய பழ சுவைகளை ஒருசேர சுவைத்து அனுபவம் உண்டா உங்களுக்கு? அதுபோன்ற வித்தியாசமான சுவையைத் தருவதுதான் வாட்டர் ஆப்பிள் பழங்கள். இந்தப் பழத்தில் வைட்டமின் சி, ஏ, பி1, பி3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன.
இந்தப் பழ மரத்தின் வளர்ச்சி ஒரு ஆள் உயரம் மட்டுமே இருக்கும். இதன் தாயகம் நமது இந்தியாதான். இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்ட இந்தப் பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இந்தப் பழத்தின் பயன்கள்:
• இந்தப் பழத்திலுள்ள பிளேவனாய்டுகள் எனும் பினாலிக் கலவைகள் இதயநோய், புற்றுநோய் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
• மாசுகள், ரசாயனங்கள் காரணமாக செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது.
• இந்தப் பழத்தில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றப் பண்பு, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மை கொண்டது.
• சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை வலுவாக்கும்.
• இப்பழத்தில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இவை உடலை நோய் தொற்றுகளிலிருந்து காத்திடும்.
• தசைப்பிடிப்பு வலிகளைப் போக்குகிறது.
• மது மற்றும் புகைப் பழக்கம், இரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹெபடோடாக்ஸிக் மருந்துகள் சாப்பிடுவது போன்றவற்றால் உண்டாகும் கல்லீரல் பாதிப்புக்கு இந்தப் பழம் சிறந்த தீர்வாகும்.
• மலச்சிக்கலைப் போக்கும் தன்மை இந்தப் பழத்துக்கு உண்டு.
• இரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடுகள், கெட்ட கொழுப்பின் அளவை இந்தப் பழம் குறைக்கிறது.
• உடலில் ஏற்படும் நீர் வறட்சியை இது தடுக்கிறது.
• மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை சீராக வைத்திருக்கு இது உதவுகிறது.
• இந்தப் பழத்தை அடிக்கடி எடுத்துக்கொள்ள இதயம் ஆரோக்கியம் பெறும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உடல் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கும் தன்மை இந்தப் பழத்துக்கு உண்டு.