நோய்களை வரவைக்கும் ஆபத்தான தூக்க முறை... நீங்கள் இதை செய்கிறீர்களா?

Sleeping Position
Sleeping Position
Published on

நாம் வேலை செய்யும் போது எவ்வளவு கவனமாக இருக்கிறோம், தினமும் நாம்  எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறோம், நம்முடைய உடல் ஆரோக்கியம் மற்றும் வேலை செய்யும் தரம் இது அனைத்துமே நம் தூக்கத்தை பொறுத்து தான் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

Heart disease, Alzheimer, Cancer போன்ற வியாதிகள் கூட வருவது நம் தூக்கத்தை பொறுத்தே இருக்கிறது. சரியாக தூங்காமல் வேலைக்கு போனால் நிறைய தவறுகள் செய்வதை உணர்வீர்கள். சரியான தூக்கம் இல்லை என்றால் மூளையில் குளுக்கோஸ் சதவீதம் குறைந்துவிடும். இதனால் நம்மால் தெளிவாக யோசிக்கவும் முடியாது. 

நாம் தினமும் துங்கும் Sleeping position நம்முடைய எலும்பு, ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் சப்ளை, இதய செயல்பாடு, ஹார்மோன்ஸ், ரத்த அழுத்தம் என்று எக்கச்சக்கமான விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. Back ல் தூங்குவது, side ல் தூங்குவது, chest ல் தூங்குவது தான் அதிகமாக எல்லோரும் தூங்கும் position ஆகும். இந்த மூன்று பொசிஷனில் அனைவரும் Side பொசிஷனில் தான் அதிகமாக தூங்குகிறார்கள்.

Side பொசிஷனில் படுக்கும் போது வலதுபக்கமாக படுத்து தூங்கினால் Digestive system ல் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் வரும். இதுவே, இடதுப்பக்கம் படுக்கும் போது உணவுகள் வயிற்றிலேயே தங்கி ஈஸியாக ஜீரணமாகும். எனவே, இடதுப்பக்கமாக தூங்குவதே சிறந்தது. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், இடதுபக்கமாக திரும்பி படுத்து தூங்குவதால் digestion, circulation, disease prevention போன்ற விஷயங்களை நம் உடலில் உள்ள உறுப்புகள் சுலபமாக செய்ய முடியும்.

இரவு தூங்கும் போது முடிந்த அளவு தளர்ந்த ஆடைகளை அணிந்துக் கொண்டு தூங்குவது நல்லது. இரண்டாவது பொசிஷனான முதுகை படுக்கையில் படும்படி படுப்பது. இப்படி தூங்குவதால் நமக்கு உடலில் எந்த வலியும் வராது. இந்த பொசிஷனில் படுக்கும் போது சிலருக்கு பிரச்னை இருக்கும். அதாவது குறட்டை விடுவோருக்கு இன்னும் அதிகமாக குறட்டை வரும். இதனால் தூக்கத்தின் நடுவில் மூச்சை அடைப்பது போல Sleep Apnea என்ற பிரச்னை வரலாம். 

மூன்றாவதாக வயிறுக்கும், நெஞ்சுக்கும் அழுத்தம் கொடுப்பது போல கவிழ்ந்து அடித்து படுக்கும் பொசிஷன். இப்படி படுத்து தூங்குவதை தான் இருப்பதிலேயே மோசமான Sleeping position என்று சொல்கிறார்கள். இதனால் நம் Spine மற்றும் கழுத்துப்பகுதியில் பிரச்னை வரலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக Lower back பகுதிகளில் நிறைய பிரச்னைகள் வரும். அதுமட்டுமில்லாமல் நம்முடைய Digestive மற்றும் Circulatory system அதிகமாக பிரஷர் குடுக்கும் நிலைமையில் இருக்கும். இதன் மீது நம் எடையை வைத்து அழுத்துவது போல இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உடம்புக்குள்ள இருக்குற நச்சையெல்லாம் ஒரே இரவில் வெளியேத்தணுமா? ஒரே ஒரு 'மாகாளி' போதும்...
Sleeping Position

இப்படி தூங்குவதால் நம்முடைய Digestive மற்றும் Circulatory system நம் உடலின் சக்தியை 25 சதவீதம் அதிகமாக எடுத்துக் கொள்ளும். இந்த பொசிஷனில் படுப்பதால் கிடைக்கும் ஒரே நன்மை குறட்டை விடுவது குறையும். இப்படி நாம் தூங்கும் பொசிஷனை சரியாக பழக்கி கொள்வது நமக்கு வரக்கூடிய நோய்களை தடுக்க உதவும்.  சரி, இனி நீங்களும் இரவு தூங்கும் போது இந்த பழக்கத்தை ஃபாலோ பண்ண மறக்காதீங்க.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com