

இன்றைய அவசர உலகில், காலை டிபனுக்கோ அல்லது மாலை ஸ்நாக்ஸுக்கோ நேரம் இல்லை என்றால், பெற்றோர்கள் உடனே கையில் எடுப்பது "இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்" பாக்கெட்டுகளைத்தான். "ரெண்டே நிமிஷத்துல ரெடி ஆகிடும், குழந்தைகளும் அடம் பிடிக்காம தட்டுல இருக்கறத காலி பண்ணிடுவாங்க" அப்படின்னு நாமளே நம்மைச் சமாதானப்படுத்திக்கிறோம்.
ஆனால், அந்த 2 நிமிட ருசிக்கு பின்னாடி, நம்ம பிள்ளைகளோட எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் பெரிய ஆபத்து ஒளிஞ்சிருக்கு.
உப்பு எனும் எதிரி!
இந்த பாக்கெட்டுகளில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து 'உப்பு' தான். ஒரு சின்ன பாக்கெட் நூடுல்ஸ்ல இருக்கிற சோடியம் அளவு, ஒரு குழந்தைக்கு ஒரு நாள் முழுக்கத் தேவைப்படுற அளவை விட ரெண்டு மடங்கு அதிகம். யோசிச்சுப் பாருங்க, பிஞ்சு வயசுலேயே இவ்ளோ உப்பை உடம்புல சேர்த்தா, அவங்க சின்னஞ்சிறு சிறுநீரகம் எப்படித் தாங்கும்? இது பிளட் பிரஷரை ஏற்றி, பிஞ்சு இதயத்தையே பதம் பார்த்துவிடும்.
மூளையை மழுங்கடிக்கும் சுவை!
நூடுல்ஸ் சாப்பிட்டா நாக்குக்கு ருசியா இருக்க காரணம் அதுல சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி (MSG) மற்றும் செயற்கை சுவையூட்டிகள். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தடுக்குது. எதிர்காலத்துல ஞாபக மறதி நோய், பார்க்கின்சன் மாதிரியான நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர இதுவே காரணமாகலாம். அதுமட்டுமில்லாம, இதைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு ஹார்மோன் கோளாறுகள் ஏற்படுவதாகவும், வளர்ச்சி தடைபடுவதாகவும் ஆய்வுகள் அலற வைக்கின்றன.
உடல் பருமனும், குடல் பிரச்சனையும்!
இது முழுக்க முழுக்க மைதாவால் ஆனது. இதில் சத்துக்கள் ஜீரோ, ஆனால் கலோரிகள்க்கலோரிகள் ரொம்ப அதிகம். இதைச் சாப்பிட்டால் செரிமானம் ஆகாது; குடல்ல பசை போல ஒட்டிக்கிட்டு, வயிற்று வலி, அஜீரணத்தை உண்டாக்கும். பச்சை நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரு சிறுவன் இறந்த சம்பவம் கூட நடந்திருக்கிறது.
தொடர்ந்து இதைச் சாப்பிடும் பிள்ளைகளுக்கு, இளம் வயதிலேயே தொப்பை போடுவது, சர்க்கரை நோய் வருவது, கல்லீரலில் கொழுப்பு சேர்வது எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாக நடக்குது. அதுமட்டுமில்லாம, அந்தப் பிளாஸ்டிக் கவரில் இருந்து சூடான தண்ணில கலக்குற ரசாயனங்கள், புற்றுநோயைக் கூட வரவழைக்கலாம்னு எச்சரிக்கிறாங்க.
"பிள்ளைங்க ஆசைப்படுறாங்களே, வேற என்ன தரது?"னு நீங்க கேட்கலாம். ஃப்ரெஷ்ஷான பழங்கள், காய்கறி சூப்னு எவ்வளவோ இருக்கு. வாரம் ஒருமுறை கூட இந்த நூடுல்ஸ், பாஸ்தா வேண்டாம். நம்ம குழந்தைகளுக்கு நாம சொத்து சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, தயவு செஞ்சு நோயைச் சேர்த்து வெச்சிடாதீங்க.