நெயில் பாலிஷ் பயன்படுத்தும் நபரா நீங்கள்? அச்சச்சோ அதில் அவ்வளவு ஆபத்தாமே!

Dangers of using nail polish
Dangers of using nail polish

ஒவ்வொரு பெண்ணும் நெயில் பாலிஷ் போடுவதை விரும்புவார்கள். ஆனால் நெயில் பாலிஷ் போடுவதால் சில ஆபத்துக்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போதெல்லாம் கிட்டத்தட்ட ஒவ்வொரு பெண்ணும் தனது கைகளை அழகாக்க நெயில் பாலிஷ் பயன்படுத்துகிறார்கள். சில சமயங்களில் நகங்களில் அதிக அளவு நெயில் பாலிஷ் பயன்படுத்துவதால் நகங்கள் பலவீனமாகிவிடும். இதனால் அவை வெடிக்க ஆரம்பித்து படிப்படியாக அவை பிரகாசத்தை இழக்க ஆரம்பித்து விடும்.

எனவே நீங்கள் நெயில் பாலிஷ் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். அதில் உள்ள ரசாயனங்கள் உங்கள் தோல் மற்றும் கண்களுடன் தொடர்பு கொண்டாலோ அல்லது உணவுடன் உங்கள் வாயில் நுழைந்தாலோ உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

நெயில் பாலிஷ் போடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன பார்ப்போமா?

நெயில் பாலீஷில் உள்ள இரசாயனங்கள் உங்கள் உடலில் நுழைந்த பிறகு மனித அமைப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதில் உள்ள இரசாயனங்கள் வயிற்றின் செரிமானம் மற்றும் ஹார்மோன் அமைப்புகளில் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

டிரிபெனைல் பாஸ்பேட் போன்ற நச்சுப்பொருள் நெயில் பாலிஷ் பயன்படுத்தும் பெண்களிடம் கண்டறியப்பட்டுள்ளது.

நெயில் பாலீஷில் இருக்கும் ரசாயனங்கள் குறிப்பாக மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் .

நெயில் பாலீஷில் டோலுமின் எனப்படும் ஒரு பொருள் உள்ளது. இது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடமிருந்து நேரடியாக குழந்தைக்கு அனுப்ப முடியும், இது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

நெயில் பாலிஷ் பயன்படுத்திய 10 மணி நேரத்துக்கு பிறகு அதன் விளைவு உச்சத்தில் உள்ளது.

நெயில் பாலீஷில் உள்ள டோலுமின் ரசாயனம் உடலில் சென்றால் அது உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சேதப்படுத்தும்.

குறைந்த தரமான நெயில் பாலீஷ் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகளில் தலைவலி, பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவை அடங்கும்.

இதையும் படியுங்கள்:
குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!
Dangers of using nail polish

நெயில் பாலீஷில் உடலை பாதிக்கு மற்றொரு பொருள் ஃபார்மால்டிஹைடு. இது நிறமற்ற வாயு. உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் ஃபார்மால்டிஹைடுடன் தொடர்பு கொள்வது தோல் அழற்சி அல்லது ரசாயன தீக்காயங்களை ஏற்படுத்தும்.

மருத்துவ வல்லுனர்கள், மலிவான விலையில் விற்கப்படும் நெயில் பாலீஷ்களை வாங்கி பயன்படுத்துவதை தவிருங்கள் என்கிறார்கள். நெயில் பாலீஷ் பயன்படுத்தும் போது உங்கள் நகங்களை சுத்தமாகவும் கரையில்லாமல் வைத்திருக்கவும். பல வண்ண நெயில் பாலீஷ் பயன்படுத்துவதற்கு முன்பு நகங்களுக்கு பேஸ் கோட்டிங் போட்டுக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com