நீங்க அதிகமா சோயா சாஸ் பயன்படுத்துறீங்களா? போச்சு!
சோயா சாஸ் ஒரு பிரபலமான சமையல் பொருள். இது சோயாபீன்ஸ், கோதுமை, உப்பு மற்றும் சில பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சோயா சாஸ் உணவுகளுக்கு ஒரு விதமான புளிப்பு சுவையை சேர்க்க உதவுகிறது. ஆனால் இதன் தனித்துவமான சுவைக்கு அப்பால் சோயா சாஸ் தொடர்ச்சியாக பயன்படுத்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும் என்பதை அனைவரும் அறிய வேண்டும்.
சோயா சாஸ் பயன்படுத்துவதன் தீமைகள்:
சோயா சாஸில் அதிக சோடியம் உள்ளதால் இதை அதிகமாக உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அமெரிக்க இதய சங்கம் ஒரு நாளைக்கு ஒரு நபர் 2300 மில்லி கிராம் சோடியத்துக்கு மேல் உட்கொள்வதை பரிந்துரைக்கவில்லை. ஆனால், ஒரு ஸ்பூன் சோயா சாஸில் 415 மில்லி கிராம் சோடியம் உள்ளது.
பலருக்கு சோயாபீன்ஸ் உணவு ஒவாமையை ஏற்படுத்தலாம். எனவே சோயா சாஸ் சாப்பிடுவது சிலருக்கு அலர்ஜி எதிர்வினைகளை ஏற்படுத்தும். தோல் தடிப்பு, வீக்கம் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற உடல் அறிகுறிகளை இவை ஏற்படுத்தலாம். எனவே அலர்ஜி பாதிப்பு ஏற்கனவே இருப்பவர்கள் சோயா சாஸை தவிர்ப்பது நல்லது.
சில ஆய்வுகளில் சோயா சாஸில் மோனோசோடியம் குளூட்டமேட் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இது தலைவலி, மயக்கம் மற்றும் இதய படபடப்பு போன்ற பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இது உண்மை என்பதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை.
சில சோயா சாஸ்களில் சோடியம் பென்சோயேட் என்ற ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகிறது. இது சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். மேலும், இதில் சேர்க்கப்படும் ஃபுட் கலர் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என்பதால், சோயா சாஸை அதிகமாக உணவில் சேர்க்காதீர்கள்.
சோயா சாஸில் கனிமச்சத்துக்கள் மிகவும் குறைவு. எனவே, அதை அதிக அளவில் உட்கொள்வது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
சோயா சாஸில் உங்கள் உணவில் அதிகமாக சேர்ப்பதால் மேலே குறிப்பிட்ட பல்வேறு விதமான தீமைகள் இருப்பதால், அவை அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதை இப்போதே தவிர்த்திடுங்கள்.