டெங்கு காய்ச்சல்: சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 

Dengue Fever.
Dengue Fever: Foods to Eat and Avoid!
Published on

டெங்குக் காய்ச்சல் என்பது டெங்கு வைரஸ் எனப்படும் ஒரு வித வைரஸால் ஏற்படும் நோயாகும். இது கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, சோர்வு மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். சில தீவிர நிலைகளில் டெங்குக் காய்ச்சல் உயிருக்கு ஆபத்தானதாகக்கூட மாறலாம். 

டெங்கு காய்ச்சலை தடுக்க உதவும் உணவுகள்: 

பப்பாளி இலைச்சாறு: பப்பாளி இலைச்சாறு பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இது டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க உதவும். 

நீர்ச்சத்து: டெங்குக் காய்ச்சல் நோயாளிகள் பெரும்பாலும் நீரிழிப்புக்கு ஆளாகின்றனர். எனவே நிறைய தண்ணீர், இளநீர், எலுமிச்சை சாறு போன்ற திரவங்களைக் குடிப்பது முக்கியம். 

பழங்கள் மற்றும் காய்கறிகள்: பழங்கள் மற்றும் காய்கறிகளில் விடமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக சிட்ரஸ் பழங்கள், கொய்யா, பப்பாளி மற்றும் கீரைகள் சாப்பிடுவதால் டெங்குக் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ளலாம். 

மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற சேர்மம் அழற்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது டெங்குக் காய்ச்சலுக்கு எதிராக சிகிச்சை அளிக்க உதவும். 

இஞ்சி மற்றும் பூண்டு: இஞ்சி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். பூண்டின் ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் டெங்கு காய்ச்சல் வைரஸை எதிர்த்து போராட உதவும். 

டெங்கு காய்ச்சல் நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: 

ஆல்கஹால்: ஆல்கஹால் உடலை நீரிழக்கச் செய்கிறது மற்றும் கல்லீரலுக்கு சேதத்தை ஏற்படுத்துவதால் இது டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. 

காஃபின்: காபி, தேநீர் மற்றும் எனர்ஜி ட்ரிங்ஸ் போன்ற காஃபின் பானங்கள் உடலை விரைவாக நீரிழக்கச் செய்வதால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது. 

சர்க்கரை நிறைந்த உணவுகள்: அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். 

இதையும் படியுங்கள்:
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) உத்தரவுகள் 2024 - ஒரு பார்வை!
Dengue Fever.

எண்ணெயில் பொரித்த உணவுகள்: இந்த உணவுகள் செரிமானத்திற்கு கடினமாக இருக்கும் என்பதால் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு ஏற்கனவே உள்ள குமட்டல் மற்றும் வாந்தியை மேலும் மோசமாக்கும். 

பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு சர்க்கரை மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட பொருட்கள் அதிகம் இருக்கும். இது டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு ஆரோக்கியமற்றதாகும். 

டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை தடுப்பூசி எதுவுமில்லை. எனவே நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதே சிறந்த வழி. இதற்கு உங்களை கொசு கடிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் வலுவாக இருக்கவும் சரியான உணவு முறையைப் பின்பற்றுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com