மனச்சோர்வை விரட்ட எளிய வழிகள்: புத்துணர்ச்சியுடன் வாழ ஒரு வழிகாட்டி!

மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகள்.
Depression | மனச்சோர்வு
Depression | மனச்சோர்வுAI Image
Updated on

நம் உடலில் கார்டிசால் என்ற ஹார்மோன்தான் சோர்வை ஏற்படுத்துவதற்கு காரணம் ஆகும். நாம் சோர்வுடன் இருக்கும் போது நம் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது‌. கார்டிசால்  அதிகமாகும்போது சோர்வு அதிகமாகும். கார்டிசால் சோர்வை மற்றும் ஏற்படுத்துவதில்லை;  இது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. அட்ரினலின் அளவு அதிகமாகும்போது நரம்பு மண்டலம் பலவீனமடைகிறது.

நவீன வாழ்க்கையின் பரபரப்பான சூழலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் பலரை வாட்டி வதைக்கிறது. இதற்கு நமது உடலில் சுரக்கும் கார்டிசால் (Cortisol) ஹார்மோனின் அளவிலும் ஏற்படும் மாற்றங்களே முக்கியக் காரணமாகும். முறையற்ற உணவுப் பழக்கம், தூக்கமின்மை மற்றும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை ஆகியவை இந்த ஹார்மோனின் அளவை அதிகரித்து நரம்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துகின்றன.

சோர்வை விரட்டி, உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க எந்த மாதிரியான உணவு முறைகளைக் கையாள வேண்டும், நரம்பு மண்டலத்தை எவ்வாறு அமைதிப்படுத்தலாம் மற்றும் மகிழ்ச்சி ஹார்மோன்களைத் தூண்டும் எளிய வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

1. கார்டிசாலை விரட்டக் கூடிய உணவுமுறை, உடற்பயிற்சி

ஊட்டச்சத்தை அதிகரிப்பதன் மூலம் சோர்வை விரட்டலாம்‌. மக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது‌. இந்த சத்து நரம்பு மண்டலத்தை அமைதியா படுத்துகிறது.  பாதாம், வாழைப்பழம், கீரைவகைகள் மற்றும் கோகோவில் இது நிறைந்துள்ளது‌. மேலும் ட்ரிப்டோஃபேன் நிறைந்த  முட்டை , மீன் மற்றும் பூசணி விதைகளையும் சேர்க்க வேண்டும்.

உடலுக்கு நன்மை தரக்கூடிய செரடோனின் என்ற சுரப்பி ட்ரிப்டோஃபேனால் ஊக்குவிக்கப்படும். உங்கள் காலை உணவு புரதம் உள்ளதாக இருக்கவேண்டும்‌. இது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். முக்கியமாக அதிக காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். மூலிகை பானங்களை குடிக்கலாம்.

மகிழ்ச்சி  ஹார்மோன்கள் ஆன செரடோனின், டோபமைன், ஆக்சிடோசின் ஆகியவை தூண்டப்படுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சியைத் தூண்டக்கூடியது. உங்கள் செல்லப் பிராணிகளும் விளையாடுவதாலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

2. உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதி படுத்துங்கள்

நரம்பு மண்டலம் - மனச்சோர்வு
நரம்பு மண்டலம் - மனச்சோர்வு

ப்ராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் நரம்பு மண்டலம் அமைதியாகும்‌. வெறும் காலில் நடப்பதால் பூமியோடு இணைந்து சோர்வு நீங்கும். இயற்கையை ரசிக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கும். உங்கள் பதட்டம் நீங்கும்‌.  உங்களுக்குப் பிடித்தவரைக் கட்டி அணைக்கும்போது ஆக்சிடோசின் என்ற சுரப்பி உருவாகி கார்டிசாலைக் குறைக்கும் என்பதை வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது‌.

நீங்கள் குளிக்கும் நீரில் எப்சம் உப்பு சேர்த்து குளிப்பதால்  மெக்னீஷியம் அதிகமாகி நல்ல தூக்கம் வரும்.

3. உடற்பயிற்சி

கடுமையாக இல்லாமல் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. யோகா மற்றும் விறுவிறுப்பான நடைப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்‌. இது சோர்வைக் குறைத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். நாம் உடற்பயிற்சி செய்யும் போது எண்டார்ஃபின் அதிகமாகும்‌. நீங்கள் அதிக நேரம் சூரிய ஒளியில் செலவிடும் போது செரடோனின் அளவு அதிகரிக்கிறது.

4. உங்கள் எண்ணங்களை எழுதுவது

உங்கள் மனதில் தோன்றுவதை எழுதுவதன் மூலம் உங்கள் சோர்வு குறைய வாய்ப்புண்டு. நேர்மறையான விஷயங்கள் குறித்து எழுதுவதால் நல்ல பயன் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்தை வெல்ல வேண்டுமா? நீங்கள் அறிய வேண்டிய ரகசியங்கள்!
Depression | மனச்சோர்வு

5. சிலவகை சப்ளிமெண்டுகள் உதவிசெய்யும்

மருத்துவர்களின் பரிந்துரையின் மூலம் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். நீங்களாகவே கடைகளில் மருந்து வாங்கி உண்பது தவறு. அது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும்.

உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை, தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்றவை நம் மகிழ்ச்சி ஹார்மோன்களின் சமநிலையைப் குறைத்து மன அழுத்தத்தையும் மனச்சோர்வையும் உண்டாக்கும்‌.

நீங்கள் மனச்சோர்வை விரட்டி மகிழ்ச்சியாக வாழ ...

  • சமச்சீரான உணவை நாடுங்கள்: உங்கள் காலை உணவில் புரதச் சத்துக்களைச் சேர்த்து, மக்னீசியம் நிறைந்த பாதாம், கீரை வகைகள் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • இயற்கையுடன் இணைந்திருங்கள்: தினமும் சிறிது நேரம் மூச்சுப்பயிற்சி (Pranayama) செய்வதோடு, உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்த இயற்கையான சூழலில் நேரத்தைச் செலவிடுங்கள்.

  • சுய மருத்துவத்தைத் தவிர்க்கவும்: உங்கள் உடல்நிலைக்குத் தேவையான சப்ளிமெண்டுகளைத் தேடும்போது, எப்போதும் தகுதியான மருத்துவரை அணுகி முறையான ஆலோசனையைப் பெறுங்கள்.

இன்றிலிருந்து சிறிய ஆரோக்கியமான மாற்றங்களை உங்கள் தினசரி வாழ்வில் கொண்டு வாருங்கள்; மன அழுத்தத்தை விரட்டி, புத்துணர்ச்சியுடன் வாழத் தொடங்குங்கள்!

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளிகளுக்கு இனி தினமும் ஊசி தேவையில்லை! வந்துவிட்டது AWiqli இன்சுலின்!
Depression | மனச்சோர்வு
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com