

தர்ப்பை புல் பாய் போட்டு படுத்தால் சிறுநீரக கல் நீங்கும். உடல் சூடு தணிக்கும். தர்ப்பையை அணிந்தவர்களிடம் பாவங்கள் ஒட்டாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமணம் முதல் இறப்பு வரை இந்து மதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. யாகங்கள் செய்யும்போது பயன்படுத்தவில்லை என்றால் அந்த யாகமே பயனற்றது என்று யஜுர் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தர்ப்பை புல்லில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. இதன் ஒரு சில துண்டுகளை குடிநீர் பானையில் போட்டு வைத்து அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும்.
சூரிய சந்திர கிரகணத்தின் போது உணவுப் பொருட்களிலும் குடிநீரிலும் சிறிது தர்ப்பை புல்லை போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
குடிநீரில் தர்ப்பை புல்லை துண்டாக்கி போட்டு குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும் எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்ப்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.
சிறுநீரகம், கல்லீரல், குடல் புண், வாய் புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்ப்பை புல் கொண்டு காய்ச்சிய நீரை குடித்தால் அந்த பிரச்சனைகள் நீங்கும். அதோடு சிறுநீரக கற்களையும் வெளியேற்றும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஆண்டு முழுவதும் வைத்து பயன்படுத்தப்படும் ஊறுகாய் வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்ப்பைப் புற்களைப் போட்டு வைத்தால் அவை கெட்டுப் போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.
தர்ப்பை புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல் சூடு தணியும்; மன உளைச்சல் நீங்கும்; நல்ல உறக்கம் கிடைக்கும்; ஆரோக்கியம் நீடிக்கும்.
தர்ப்பை வேரை அரிசி கழுவிய நீருடன் அரைத்து மூன்று நாட்கள் உட்கொண்டால் பெரும்பாடு நீங்கும்.
தர்ப்பை வேர் சிற்றாமுட்டி வேர், இரண்டையும் அரிசி கழுவிய நீருடன் அரைத்து உட்கொண்டால் மூலத்திலிருந்து பெருகும் ரத்தப்போக்கு நிற்கும்.
தர்ப்பை புல்லை எடுத்து சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி இருநூறு மில்லி நீர் விட்டு காய்ச்சி நூறு மில்லியாக வற்றியதும் குடித்து வந்தால் தாகம் உடல் அரிப்பு ஆகியவை குணமாகும்.
தர்ப்பைப் புல் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. இது காயங்களை குணமாக்க உதவுகிறது.
பிறருக்கு இளமையிலேயே தலைமுடியானது நரைத்து போய் தலைமுடியின் அழகையே கெடுத்துவிடும். இது பித்தத்தினால் ஏற்படுவது. பித்தம் இருப்பவர்கள் தர்ப்பை புல்லின் வேரை நிழலில் காய வைத்து, பொடி செய்து அந்த பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.
கோடைகாலம் வந்துவிட்டாலே உடல் சூடு ஏறிவிடும்; உடல் சூடு பிரச்சனையை சந்திப்பவர்கள் தர்ப்பையால் செய்யப்பட்ட பாயில் படுத்து உறங்கினால் உடலில் இருக்கக்கூடிய சூடு தணிந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)