ஊதுபத்தி புகை நரம்பு கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

Did you know that Agarbatti smoke can cause neurological disorders?
Did you know that Agarbatti smoke can cause neurological disorders?https://www.maalaimalar.com

துபத்தி நமது வீடுகளிலும் கோயில்களிலும் சுவாமிக்காக ஏற்றப்படும் ஒரு பூஜை பொருள். இதிலிருந்து எழும் நறுமண புகை நரம்புக் கோளாறு மற்றும் சுவாசக் கோளாறுகள் என பல வகை உடல் பிரச்னைகளையும் உண்டாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. செல்களில் நச்சுத்தன்மை: ஊதுபத்திகள் கொளுத்தப்படும்போது அது அதிகளவு காற்று மாசுபாட்டையும், உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய இரசாயன பொருட்களையும் வெளியிடுகிறது. இதில் மிகவும் முக்கியமான ஒரு பாதிப்பு என்னவென்றால் செல்களில் அதிகரிக்கும் நச்சுத்தன்மைதான். இது மரபணுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் நன்மைக்கானதாக இருக்காது.

2. சுவாசக்கோளாறு: ஊதுபத்தி கொளுத்தப்பட்டிருக்கும்போது பலருக்கு இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம். ஏனெனில், ஊதுபத்தியில் சுவாச மண்டலத்தை பாதிக்கும் பல பொருட்கள் உள்ளன. சில ஊதுபத்திகள் சிகரெட் புகை அளவிற்கு நுரையீலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தப் புகை உங்கள் சுவாச மண்டலத்தை விரிவடையச் செய்யும்.

3. நுரையீரல் புற்றுநோய்: ஊதுபத்தியிலிருந்து வெளிப்படும் புகை உங்கள் நுரையீரலை நேரடியாக பாதிக்கக்கூடியது. இது உங்கள் நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தி புற்றுநோய் ஏற்படக் காரணமாய் அமைகிறது. அதிகளவு ஊதுபத்தி புகையை சுவாசிப்பது நுரையீரல் மட்டுமின்றி, பொதுவான ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

4. ஆஸ்துமா: புகை மற்றும் காற்று மாசுபாடே ஆஸ்துமா ஏற்படுவதற்கான முதன்மையான காரணங்கள் ஆகும். நுரையீரல் செல்களில் ஏற்படும் வீக்கமே நாளடைவில் விரிவடைந்து ஆஸ்துமாவாக மாறுகிறது. எனவே, அடிக்கடி ஊதுபத்தி புகையை சுவாசிப்பது ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இருமல் மற்றும் சுவாசப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

5. சரும அழற்சி: சுற்றுப்புறத்தால் உங்களுக்கு சரும பாதிப்புகள் ஏற்படும் பிரச்னை இருந்தால், ஊதுபத்தி புகை அந்த வாய்ப்புகளை அதிகப்படுத்தும். ஊதுபத்தியை கொளுத்தும்போது அதில் உள்ள இரசாயனங்கள் உங்கள் சருமத் துளைகளின் வழியாக உள்ளே செல்கின்றன. உடல் இயக்கத்திற்குத் தேவைப்படும் உயவு எண்ணெய்கள் வெளிவருவதை இது தடுப்பதால் சருமம் பாதிப்பிற்கு உள்ளாகும்.

6. குழந்தைகளை பாதிக்கும்: பொதுவாகவே, அடிக்கடி ஊதுபத்தி உபயோகிப்பது சரியான யோசனை அல்ல. எனவே, கர்ப்ப காலத்தில் இதனை அதிகம் உபயோகிக்காமல் இருப்பதே நல்லது. கர்ப்ப காலத்தில் ஊதுபத்தி புகையை சுவாசிப்பது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை நீங்களே ஆபத்தில் சிக்க வைப்பது போன்றதாகவும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு லுக்கேமியா ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சந்தியா கால நேரத்தில் விளக்கேற்றினால் தீரும் பிரச்னைகள் என்னென்ன தெரியுமா?
Did you know that Agarbatti smoke can cause neurological disorders?

7. நரம்புக் கோளாறுகள்: வீட்டிற்குள் ஊதுபத்தி கொளுத்துவது அதிகளவு கார்பன் மோனாக்சைடை சுவாசிக்கச் செய்கிறது. இது உங்கள் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது கவனச் சிதறலையும், ஞாபக மறதியையும் ஏற்படுத்தும்.

8. தலைவலி: குறைவான அளவு கார்பன் மோனாக்சைடு சுவாசிப்பது கூட தலைவலி, குமட்டல், மயக்கம், அசௌகரியம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, ஊதுபத்தி புகையில் தியானம் செய்வதை முடிந்தளவு தவிர்க்கவும்.

9. இதய பாதிப்பு: தொடர்ந்து ஊதுபத்தி புகையை சுவாசிப்பவர்களுக்கு இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் 12 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அதிலும் 19 சதவீதம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே ஊதுபத்தி உபயோகத்தை முடிந்தளவு குறைத்துக்கொள்ளுங்கள். ஊதுபத்திக்கு பதில் சாம்பிராணி புகை போடலாம் அதில் எந்தக் கேடும் கிடையாது. அதுவே நம் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com