அதிகமாக நொதித்த உணவுகள் ஆரோக்கியக் கேடுகளை உண்டுபண்ணும் தெரியுமா?

நொதித்த உணவுகள்
நொதித்த உணவுகள்https://depositphotos.com
Published on

பொதுவாக, நொதிக்கச் செய்த (Fermented) உணவுகள் நம் ஜீரண மண்டல உறுப்புகளில் நடைபெறும் செரிமான இயக்கங்களுக்கு சிறந்த முறையில் நன்மை புரியக்கூடியவைகளாகக் கருதப்பட்டு அனைவராலும் விரும்பி உண்ணப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் சில வகை உணவுகள் அளவுக்கு அதிகமாக நொதித்து (Over fermented) விட்டால் அவை செரிமானத்தில் சீர்கேடுகளைக் உண்டாக்கக் கூடியவைகளாகவும் மாறிவிடும். அளவுக்கு அதிகமாக நொதித்துவிட்ட உணவுகள், பூஞ்சை படிந்த சோயா வகை உணவுகள், அதிகளவு ஹிஸ்டாமைன் அடங்கிய பால் பொருள்கள் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்த்த கோம்புச்சா டீ போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

உணவுகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அவ்வுணவுகளில் ஏற்கெனவே உள்ள சர்க்கரையை முழுவதுமாக உட்கொண்டு, பின் மற்ற கூட்டுப் பொருட்களையும் உடைக்க ஆரம்பிக்கும். அப்போது அந்த உணவு அதிகமான நொதித்தலுக்கு உட்பட ஆரம்பிக்கும். அப்போது அதில் ஹிஸ்டாமைன் (histamine), டய்ராமைன் (tyramine) போன்ற பல பயோஜெனிக் ஆமைன்கள் (amines) உற்பத்தியாகும். இந்த விதமான ஆமைன்கள் உடலில் தலைவலி, நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் பல விரும்பத்தகாத ஜீரணக் கோளாறுகளை உண்டுபண்ணும். குறிப்பாக ஹிஸ்டாமைன் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஒரு உணவு அதிகம் நொதித்துள்ளதா என்பதை அதிலிருந்து வரும் ஸ்ட்ராங் வாசனை மூலம் கண்டுபிடிக்கலாம். மேலும் ஃபிரஷ்ஷான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது நலம்.

டெம்ப்பே (tempeh) நட்டோ (natto) மற்றும் சில மிஸோ பேஸ்ட் போன்ற உணவுகளுக்கு அடிப்படைப் பொருளாக உள்ளது சோயா பீன்ஸ். மாசடைந்ததின் காரணமாக இந்த சோயா மீது ஒருவகை பூஞ்சையின் மோல்ட் (mould) படர்ந்திருந்தால் அது உண்ணத் தக்கதாகாது. ஏனெனில் இந்த மோல்ட் மைக்கோ டாக்ஸின் (mycotoxin) என்றொரு தீங்கிழைக்கும் பொருளை உற்பத்தி செய்யக்கூடியது. இது பல வகையான செரிமானக் கோளாறுகளை உண்டுபண்ணும்.

சீஸ், யோகர்ட் மற்றும் கெஃபிர் போன்ற நொதிக்கச் செய்து தயாரிக்கப்பட்ட பால் பொருட்களில் அடங்கியுள்ள ப்ரோபயோடிக்ஸ் செரிமானத்துக்கு சிறந்த முறையில் உதவுபவை. இதன் உற்பத்தியின்போது பால் பொருட்களில் உள்ள ஹிஸ்டாமைன் அதன் அளவில் அதிகமாகும். ஏற்கெனவே ஹிஸ்டாமைன் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த உணவுகளைத் தவிர்த்து, பிளைன் யோகர்ட், கெஃபிர் மற்றும் ரிகொட்டா, மொசரெல்லா போன்ற ஃபிரஷ் சீஸ் வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரே ஒரு போன் கால்; எல்லா தர்மசங்கடங்களையும் தவிர்க்கலாம்!
நொதித்த உணவுகள்

நுரைத்து வரும் தன்மை கொண்ட பிரசித்தி பெற்ற டீ கோம்புச்சா. இதன் தயாரிப்பில் அதிகளவு சர்க்கரை மற்றும் செயற்கையான சுவையூட்டும் பொருள்களும் சேர்க்கப்படும். செயற்கை இனிப்பூட்டிகளான சோர்பிடால் (sorbitol) மற்றும் க்ஸைலிடால் (xylitol) போன்றவை குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களை தொந்தரவு செய்து செரிமானக் கோளாறினால் உண்டாகும் பேதி, வீக்கம், வாய்வு உற்பத்தி போன்ற உபாதைகள் உண்டாகவும், கோம்புச்சா டீயில் உள்ள ப்ரோபயோடிக்ஸ் எதிர்மறை வினையாற்றவும் வழிவகுக்கும்.

மேற்கூறிய உணவுகளை உண்ணுவதற்கு முன் கூடுதல் கவனமுடன் இருப்பது நன்மை தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com