தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம் தெரியுமா?

Did you know that if you eat an apple a day, you don't have to go to the doctor?
Did you know that if you eat an apple a day, you don't have to go to the doctor?

ளபளவென கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கும் ஆப்பிளை ருசிக்க விரும்பாதவர்கள் யாரும் இல்லை. பொதுவாக, எல்லா சீசனிலும் கிடைக்ககூடிய பழம் இது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் ஒன்பது விதமான பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ஆப்பிள் பழத்தில் நன்கு கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கிறது. அது நமது உடலில் ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழி வகுக்கிறது. மலச்சிக்கலை தீர்க்கிறது.

2. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. அதனால் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

3. நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் சளி, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் வரவிடாமல் தடுக்கிறது.

4. ஒரு ஆப்பிளை தினமும் காலையில் சாப்பிட்டால், வயிறு நிறைந்த உணர்வைத் தரும். அதனால் வேறு தின்பண்டங்களை தேட மாட்டோம். அதனால் உடல் எடை சரியான விதத்தில் இருக்கும். எடை குறையும்.

இதையும் படியுங்கள்:
பனங்கற்கண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? 
Did you know that if you eat an apple a day, you don't have to go to the doctor?

5. எலும்புகளை நல்ல பலத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மூட்டு வலி போன்ற பிரச்னைகளை தள்ளிப்போடுகிறது. இதிலிருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் நார்ச்சத்துகளும் சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கும்.

6. இதில் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால் முக அழகுக்கு தேவையான கொலாஜனை உற்பத்தி செய்கிறது. அது நம்முடைய சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

7. தினமும் வெளியில் சென்று மோசமான காற்றை சுவாசித்து வருவதால், நிறைய பேருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். ஆனால், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நுரையீரல் நன்றாக வேலை செய்ய உதவும். நுரையீரல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கிறது.

8. வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி பழத்தை போன்று ஆப்பிள் நிறைய நீர்ச்சத்து நிரம்பி இருக்கிறது. நமது உடலை நீரேற்றத்துடன் வைக்கிறது. முகத்தையும் உடலையும் பளபளப்பாக வைத்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com