மூளைத்திறனை மேம்படுத்தும் 4 மகிழ்ச்சி ஹார்மோன்கள் தெரியுமா?

happy hormones
happy hormoneshttps://villagepipol.com
Published on

நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சியை தேடித்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படுகிறோம். மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்பொழுதும், அன்பு பொழியும்போதும் மகிழ்ச்சி அடைகிறோம். மனித உடலில் மகிழ்ச்சியை பெறுவதற்கென்றே சில ஹேப்பி ஹார்மோன்கள் உள்ளன. இவை எல்லாமே வெவ்வேறு சுரப்பிகள் மூலம் பெறப்படும் ரசாயனங்கள்தான்.

ஆக்ஸிடோஸின், எண்டோர்பின், டோபமைன் மற்றும் செரோடோனின் எனும் நான்கு ஹார்மோன்கள்தான் மகிழ்ச்சி உணர்வு ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளன. இவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் செயல்கள் மூலம் எப்படி தூண்டலாம் என்று பார்க்கலாம்.

டோபமைன்: இதமான உணர்வுகள் மற்றும் கவனம் ஆகியவற்றோடு தொடர்புடையது இந்த டோபமைன். சிறந்த நினைவாற்றலுக்கும், கற்றல் திறனுக்கும் டோபமைன் ஹார்மோன் உதவுகிறது. நம் மனநிலையை சீராக வைத்துக் கொள்வதற்கு இது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. பிடித்த உணவுகளை சாப்பிடும்போதும், வெற்றிகளை கொண்டாடும்போதும், பிடித்த செயல்களை சிறப்பாக செய்து முடிக்கும்போதும் இந்த ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது.

ஆக்ஸிடோஸின்: உறவில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நம்பிக்கை, பிணைப்பு மற்றும் சமூகத் தொடர்பை ஊக்குவிக்கவும் இந்த ஹார்மோனின் உதவி தேவை. இந்த ஹார்மோனுக்கு, ‘காதல் ஹார்மோன்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. இவை குழந்தை பிறப்பதற்கும், பாலூட்டுவதற்கும், உறவில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேவையான ஒன்று. நாம் ஒருவரை கட்டி அணைக்கும் போதும், செல்லப் பிராணிகளுடன் விளையாடும் போதும் இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கிறது.

செரோடோனின்: இவை தூக்கம், பசியின்மை மற்றும் செரிமானத்தை ஒழுங்குபடுத்தும். இந்த ஹார்மோன்தான் நாம் எவ்வளவு சாப்பிட முடியும், எவ்வளவு நேரம் தூங்க முடியும், எந்த அளவிற்கு ஒரு வேலையை செய்ய முடியும் என்பதை தீர்மானிக்கும். இந்த ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்க உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வதும், சூரிய ஒளி நம் மீது படும் இடங்களில் இருப்பதும் செரோடோனின் ஹார்மோன்களை அதிக அளவில் சுரக்கத் தூண்டும்.

இதையும் படியுங்கள்:
லெக்டின் சத்து  நிறைந்த உணவு மற்றும் பழங்களை ஏன் குறைவாக சாப்பிட வேண்டும் தெரியுமா?
happy hormones

எண்டோர்பின்: இதற்கு வலி நிவாரணி ஹார்மோன் என்ற பெயரும் உண்டு. இயற்கையான வலி நிவாரணியாகவும், மனநிலையை மாற்றும் சக்தியாகவும் செயல்படுகின்றது. நமக்கு மன அழுத்தம் இருந்தாலோ, உடலில் எங்காவது வலி இருந்தாலோ இந்த ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். இந்த ஹார்மோன் அதிகம் சுரக்க உடற்பயிற்சி செய்தாலோ, வாய்விட்டு சிரித்தாலோ போதும்.

இத்துடன் நம் உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துவதும் அவசியம். குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் அதிக புரதச்சத்து நிறைந்த  உணவுகளை எடுத்துக் கொள்வதும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகளவில் சுரக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com