பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் அறிவியல்பூர்வ நன்மைகள் தெரியுமா?

Did you know the scientific benefits of walking backwards?
Did you know the scientific benefits of walking backwards?https://www.maalaimalar.com

டைப்பயிற்சியினால் ஏராளமான நன்மைகள் உண்டு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், பின்னோக்கி நடப்பதிலும் பல நன்மைகள் உண்டு என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பொதுவாக, பின்னோக்கி நடப்பது என்பது சற்றே வேடிக்கைக்குரியதாக பார்க்கப்படும். ஏனென்றால், அது வழக்கமான நடையில் இருந்து மாறுபட்டது. ஆனால், நன்கு பழகிய இடத்தில் மொட்டை மாடி அல்லது வீட்டுத் தோட்டம், பூங்கா போன்ற இடங்களில், பின்புறம் இடிக்காதவாறு ஏற்பாடுகள் செய்து கொண்டு தினமும் சிறிது நேரம் பின்னோக்கி நடப்பதால் ஒருவருடைய ஞாபக சக்தி அதிகரிக்கும். செய்யும் வேலையில் கவனம் கிடைக்கும். மூட்டு வலி வருவதை தள்ளிப் போடலாம். தசைகளுக்கும் நல்ல பயிற்சியாக அமையும்.

பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகள்:

1. மூளையின் ஆரோக்கியம் பலப்படும். நல்ல நினைவாற்றலை ஏற்படும். மனதில் உள்ள அழுத்தம் நீங்கும். மூளையில் உள்ள நரம்புகளை தூண்டி அமைதி நிலையில் வைக்கும். உற்சாகத்தையும் அளிக்கும்.

2. பின்னோக்கி நடப்பதால் மூளையின் செல்கள் தூண்டப்படுகின்றன. புதுவிதமான கட்டளையை அது  மூளைக்கு பிறப்பிக்கும். பின்னோக்கி நடக்கும்போது மூளை தேவையில்லாத விஷயங்களைப் பற்றி யோசிக்காது. இந்த கணத்தில் மட்டும் வாழ வைக்கும். சுற்றிலும் என்ன நடக்கிறது என்கிற விழிப்புணர்வோடு செயல்பட வைக்கும்.

3. புதுவிதமான கோணத்தில் நடப்பதால் அது தசைகளுக்கு அதிக ஆற்றலைத் தந்து, பலத்தைக் கொடுக்கும். மேலும், சரியாக பேலன்ஸ் செய்து நடப்பதை கற்றுத் தரும். கீழே விழாமல் பத்திரமாக நடக்கச் செய்யும்.

4. உடலில் உள்ள கலோரிகளை விரைவில் எரிக்கச் செய்யும். அதிக அழுத்தம் கொடுத்து பின்னோக்கி நடப்பதால், அது உடலை ஆற்றலுடன் செயல்படச் செய்து கலோரிகளை வேகமாக எரிக்கிறது. முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடப்பது 40 சதவீதம் அதிகமான கலோரிகளை எரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

5. பின்னோக்கி நடத்தல் நுரையீரல் செயல்பாட்டையும் இதய செயல்பாட்டையும் ஆரோக்கியமாக வைக்கிறது. ஏனென்றால், அதற்கு நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. விளையாட்டு வீரர்கள், குறிப்பாக ஓடுபவர்களுக்கு இப்படி நடப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது. அவருடைய பின்புற தசைகளை நன்றாக வலுவாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
முருகனுக்கு படிப்பாயசம் நிவேதனம் செய்யும் கோயில் தெரியுமா?
Did you know the scientific benefits of walking backwards?

6. மூட்டு வலி உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சி இது. அது அவர்களின் வலியை குறைக்கிறது. ஏனென்றால், பின்னோக்கி நடக்கும்போது மூட்டுகளின் மீது தரப்படும் அழுத்தம் குறைகிறது. தசைகளை நன்கு இயங்கச் செய்கிறது.

வெளியிடங்களில் பின்னோக்கி நடப்பதற்கான சூழ்நிலைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

வீட்டிலேயே நடப்பது என்றால் ட்ரெட்மில்லில் பின்னோக்கி நடக்கலாம். அதில் இருபுறமும் பிடித்துக்கொள்ள வலுவான அமைப்பு இருக்கிறது.

வீட்டைத் தவிர, வெளியிடங்களில் பின்னோக்கி நடக்க விரும்பினால் அந்த இடத்தில் போக்குவரத்து பிரச்னைகளோ வேறு ஏதேனும் தடைகளோ இல்லாமல் இருக்க வேண்டும். முதலில் ஒரு சிறிய அளவு தூரத்தை நடந்து பழகி விட்டு பின்பு தூரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். நடக்கும்போது காலுக்கு சரியான ஷூக்களை அணிந்து நடக்க வேண்டும். சமதளமான தரையாக அது இருக்க வேண்டும். பின்னோக்கி நடக்கும்போது மிகவும் கவனத்துடன் நடந்தால் அது உடலுக்கும் மனதுக்கும் ஏராளமான நன்மைகளைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com