எத்தனை முயன்றும் உடல் எடையை குறைக்க முடியலையா? இருக்கவே இருக்கு...

Loss weight
Loss weight
Published on

சியா விதைகள் என்பது Salvia hispanica என்ற தாவரத்தில் இருந்து வருகிறது. இது தென் அமேரிக்க நாடுகளில் விளைகிறது. Mayan civilization, Aztec civilization போன்ற தென் அமேரிக்காவின் பூர்வக்குடி மக்களின் வாழ்க்கையிலேயே இந்த சியா விதைகள் பலகாலமாகவே இருந்து வந்திருக்கிறது.

அந்த காலத்திலேயே இந்த விதைகள் சக்தி தரக்கூடிய ஒரு பொருளாக பார்க்கப்பட்டது. சியா விதைகளின் 100 கிராமில் 486 கலோரிகள், 42 கிராம் மாவுச்சத்து, 34 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதில் குளுக்கோசாக மாறக்கூடிய மாவுச்சத்துக்கள் மிகவும் குறைவு. இதில் புரதம் 16 கிராம், கொழுப்புகள் 30 கிராம் கிடைக்கிறது. Omega 3 fat 18 கிராம், கால்சியம் 600 மில்லி கிராம் உள்ளது.

சியா விதைகள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. ஏனெனில், இதில் ஒமேகா 3 கொழுப்புகள் இருப்பதால், Triglycerides குறைவதால், HDL அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதில் நார்ச்சத்து இருப்பதால், வயிறு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. மேலும் சியா விதைகளை பயன்படுத்தும் போது சர்க்கரை அளவு சிறிது குறைவதாக சொல்லப்படுகிறது. இது எடைக்குறைக்க உதவுகிறது என்றும் சில ஆராய்ச்சிகளில் கண்டுப்பிடிக்கப் பட்டிருக்கிறது.

இருப்பினும் சியா விதைகள் என்பது பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகையை சார்ந்தது. இது எப்போது நமக்கு பயன் தரும் என்றால், இதை அதிக அளவில் எடுத்துக்கொண்டு மற்ற உணவை குறைக்கும் போது, நல்ல மாற்றத்தை காண முடியும். தேவையில்லாத மாவுச்சத்துகளை குறைத்து அதற்கு பதில் சியா விதைகளை மோருடனோ அல்லது ஜூஸிலோ சேர்த்து சாப்பிடுவதனால் வயிறு நிறையும்.

இதையும் படியுங்கள்:
ரேஷன் அரிசி சர்க்கரை நோய்க்கு நல்லது என்று சொல்லப்படுவது உண்மையா?
Loss weight

இதனால் நமக்கு உடல் எடை குறைவது, கொலஸ்ட்ரால் குறைவது போன்ற பலன் கிடைக்கலாம். ஆனால், எப்போதும் போல மாவுச்சத்து, கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு விட்டு சியா விதைகளை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்வதால் எந்த மாற்றமும் ஏற்படாது. எனவே, சியா விதையை சாப்பிட்டாலே எல்லா பலனும் கிடைக்கும் என்று நினைக்காமல் அதை மற்ற தேவையில்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக பயன்படுத்தும் போது நல்ல பலனை காண முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com