காய்ச்சல் நின்றதும் இதை செய்யுங்கள்… சோர்வே இருக்காது!

Fever tiredness
Fever tiredness
Published on

காய்ச்சல் குறைந்துவிட்டது என்று மூச்சு விடும் சமயத்தில், உடல் சோர்வு ஏற்பட்டு நம்மை சித்ரவதை செய்யும். அந்த சோர்விலிருந்து நமது உடலை மீட்டெடுக்க சில வழிகளைப் பார்ப்போம்.

அழற்சி, தொற்று போன்ற நோய்க்கிருமிகள்தான் நமக்கு காய்ச்சலை உண்டாக்குகிறது. இந்த நோய்க்கிருமிகளை நோயெதிர்ப்பு சக்திகளே எதிர்த்து போராடுகின்றன. நோயெதிர்ப்பு அமைப்பு நோய்க்கிருமிக்கு எதிராக செயல்படும் போது, சோர்வடைந்து விடுகிறது. அதனால் காய்ச்சலுக்கு பிறகு உடலும் சோர்வடைந்து விடுகிறது.

சோர்விலிருந்து வெளிவர சில டிப்ஸ்கள்:

1.  முதலில் தொற்றுக்கிருமிகளால் காய்ச்சல் ஏற்படுகிறது. அதனுடன் எதிர்த்துப் போராடிய நோயெதிர்ப்பு அமைப்பும் மிகவும் சோர்வாக இருக்கும். நினைத்துப் பாருங்கள் மீண்டும் காய்ச்சல் வந்தால், அதனை எதிர்க்கும் சக்தி நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இருக்குமா? ஆகையால் மீண்டும் காய்ச்சல் வராமல் இருக்க சுத்தமாக இருக்க வேண்டும். அவ்வப்போது கைகளை சுத்தம் செய்தல் வேண்டும். பொது கழிவறைகளைத் தவிர்க்கவும்.

2.  தூக்கமின்மையைத் தொடர்ந்துதான் சோர்வு அதிகரிக்கும். ஆகையால், காய்ச்சலுக்கு பிறகு சோர்வு குறைய விரைவான மீட்புக்கு போதுமான அளவு தூக்கமும் ஓய்வும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

3.  காலை, மதியம், இரவு என உணவை தவிர்க்காமல், அதேசமயம் ஆரோக்கியமான உணவை சேருங்கள். புரதம் நிறைந்த பருப்பு வகைகள், பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை திட்டமிட்டு சேர்ப்பது சோர்வை போக்கும்.

4.  சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மீட்டெடுக்கவும் செயல்முறையையும் தாமதப்படுத்துகிறது. இனிப்புகள், மிட்டாய்கள், பேக்கரி வகைகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றை தவிர்த்து மென்மையான உணவுகள் சேர்ப்பது பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
மாத்திரை இல்லாமல் தலைவலியை குறைக்க சில எளிய டிப்ஸ்!
Fever tiredness

5.  வயிற்றுக்குள் நல்ல பாக்டீரியாவை அதிகரிக்க புரோபயாடிக் சப்ளிமெண்ட்ஸ் அல்லது தயிர் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இவை வயிற்றுக்குள் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இது இயற்கையான புரோபயாடிக்குகளாக செயல்படும்.

இந்த ஐந்து விஷயத்தை தெரிந்துக்கொண்டு பின்பற்றினாலே, காய்ச்சலுக்குப் பின்னால், சோர்வு குறைவாக இருக்கும். சில மணி நேரங்கள் நன்றாக உறங்கினாலே, முழுச் சோர்வையும் தவிர்த்துவிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com