மாத்திரை இல்லாமல் தலைவலியை குறைக்க சில எளிய டிப்ஸ்!

Headache relief tips
Headache relief tips

பல காரணங்களால் பலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அப்போது ஒவ்வொருமுறையும் மாத்திரை பயன்படுத்துவதால், சில பக்க விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும். ஆகையால், மாத்திரை இல்லாமல் எளிய முறையில் சில மணி நேரங்களில் எப்படி தலைவலியை குறைக்கலாம் என்று பார்ப்போம்.

ஒருவருக்கு பதட்டம், தூக்கமின்மை, அச்சம், மன அழுத்தம், சோர்வு, உயர்ரத்த அழுத்தம் போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். இதனால், அடிக்கடி சிலருக்கு தலைவலி ஏற்படும். ஒவ்வொருமுறையும் சிலர் மாத்திரை போடுவார்கள் அல்லது சிலர் தேநீர் அருந்துவார்கள். அதிகப்படியாக பயன்படுத்தும் எதுவும் இறுதியில் நமக்கு எதோ ஒரு பக்க விளைவையே தரும். ஆகையால் இவை இல்லாமல் இயற்கை முறையில் தலைவலியை எப்படி குறைக்கலாம் என்று பார்ப்போம்.

நெற்றியில் அழுத்தம்:

சிலருக்கு இறுக்கமாக முடியைப் பின்னினால், தலைவலி ஏற்படும். ஆகையால், அவற்றை விரித்துவிட்டு உச்சந்தலையில் அழுத்தம் கொடுப்பது வலியை கட்டுப்படுத்தும். கைவிரல்களால் நெற்றியின் மேல் சிறிது நேரம் விட்டுவிட்டு அழுத்துங்கள். சில நேரங்களில் படிப்படியாக குறையும்.

மசாஜ் செய்யுங்கள்:

உங்கள் நெற்றி , கழுத்து பொன்ற இடங்களில் மசாஜ் செய்வது மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் தலைவலியை கட்டுப்படுத்த செய்யும். புதினா எண்ணெய், துளசி எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் போன்ற எண்ணெய்கள் கொண்டு புருவங்கள் நெற்றிப்பகுதியை மசாஜ் செய்யவும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இவை உதவும்.

எலுமிச்சை தேநீர்:

தலைவலியை குறைக்க ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளலாம். இளஞ்சூடான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கப் வீதம் குடிக்கவும்.

நீரேற்றமாக இருங்கள்:

மூலிகை பானங்கள் வலி நிவாரணியாக இருக்கும். இஞ்சி தேநீர் அல்லது இஞ்சி கலந்த பானங்கள் தலைவலிக்கு சிறந்த தீர்வாக இருக்கும். இரத்த நாளங்களின் வீக்கத்தை குறைக்க இவை உதவும். உடல் நீரேற்றமாக இருந்தால், வலி குறையும்.

சுயிங்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்:

பொதுவாக சுயிங்கம் போன்ற அதிகமாக சிரமப்பட்டு மெல்லும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இதனால் தாடை பகுதியில் வலி, கன்னங்களின் உட்புற வலி, உதடுகள் அசைவால் கூட வலி உண்டாகி தலைவலி உணர்வை அதிகரிக்கும். மென்மையான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
பாக்கெட் இட்லி மாவினால் இவ்வளவு ஆபத்துக்களா?
Headache relief tips

ஐஸ் மசாஜ்:

ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் சுற்றி அதை நெற்றிப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். 15 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுப்பது வலியை குறைக்க செய்யும். குறிப்பாக ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் இந்த ஐஸ் மசாஜ் செய்வது நல்லது.

இந்த முயற்சிகளை செய்தும் வலி குறையவில்லை என்றாலோ, தலைவலி உடன் தலைச்சுற்றல், பேசுவதில் பிரச்சனை, குழப்பம் போன்ற அறிகுறிகள் வந்தாலோ, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com