மூல நோய் இருக்கா? இந்த 'சிம்பிள்' தப்ப மட்டும் பண்ணாதீங்க!

Piles
Piles
Published on

பெரும்பாலும் மூல நோய் 45 வயதுக்கு மேல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும். சில சமயம் வயதானவர்களுக்கும் இது வரும். மூல நோயில் இரண்டு அறிகுறிகள் உள்ளன. ஒன்று உள் மூலம் மற்றொன்று வெளி மூலம். ஆசனவாயில் உள்புறமோ அல்லது வெளிப்புறம் சிறிய கட்டிகள் தென்பட்டாலோ அல்லது நரம்புகள் பாதிக்கப்பட்டாலோ இந்த மூல நோய் வருகிறது.

இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். நார்ச்சத்து குறைவாக எடுத்துக் கொள்பவர்களுக்கும், மைதா புரோட்டா போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கும், ஒரே இடத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும். சிலர் பாத்ரூமில் மொபைல் பேசிக்கண்டும் மொபைல் பார்த்துக்கொண்டும் மணிக்கணக்காக உட்கார்ந்து இருப்பார்கள்.

அது தவறான செயலாகும். மோர் தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும். மலக்குடலின் உள்புறமும் வெளிப்புறமும் நரம்புகள் பாதிக்கப்பட்டால், இது உடனடியாக தாக்கும். ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வதாக இருந்தால் சிறிது நேரம் எழுந்திருத்து கொஞ்சம் நடை பயின்று வரலாம். அதிக வெப்பம் காரணமாகவும் இது வரக்கூடும். நிறைய காய்கறிகள் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். தீராத பட்சத்தில் அதற்குரிய டாக்டரை அணுகுவது நல்லது.

தற்காலங்களில் பஸ் ஸ்டாண்ட் ரயில் நிலையம் போன்ற இடங்களில் ரூம் போட்டு வட மாநிலத்தவர்கள் மூலம் பௌத்திரம் இவற்றை இரண்டே நாட்களில் குணப்படுத்துகிறோம் என்று வால் போஸ்ட் அடித்து வரவேற்கிறார்கள். அவர்களை நம்பி சென்றால் மேலும் ரணமாக்கி விடுவார்கள். எனவே அவர்களிடம் போவதை தவிர்த்து முடிந்தவரை டாக்டரை அணுகுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
முடி கொட்டுதா? நரைக்குதா? இந்த 10 முடி பற்றிய கட்டுக்கதைகளை நம்பாதீங்க!
Piles

மலம் கழிக்கும் போது ரத்தம் வருதல் எரிச்சல் அரிப்பு நாள்பட்ட புண் இவை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். ஆசனவாயில் வீங்கிய நரம்புகள் தான் இதற்கு முக்கிய காரணம். உடல் பருமன் உள்ளவர்கள், அதிக எடை தூக்குபவர்கள் இவர்களை மூலநோய் எளிதாக தாக்குகிறது. மலச்சிக்கல் வராமல் இருக்க பேரிக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு, முந்திரி, பச்சை பட்டாணி, வேர்க்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு, பழங்கள் மற்றும் காய்கறிகள், தயிர், மோர் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வருமுன் காப்பது சிறந்ததாகும் .

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com