அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

Frequent urination
Frequent urination
Published on

நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிறைய பேர் இதை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல் நலத்தின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இதை உதாசீனப்படுத்துவது பின்னாளில் எதிர்மறை விளைவுகளை சந்திக்கக் காரணியாக அமையலாம்.

பொதுவான காரணங்கள்: நீரிழிவு, சிறுநீர் பாதை தொற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் புரோஸ்டேட் பிரச்னைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். மேலும், சிறுநீரகத் தொற்று, சிறுநீர்ப்பை கற்கள் போன்றவற்றினால் கூட இவ்வாறு நிகழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பதால் ஆண்களுக்கு எரிச்சல் உணர்வு, வலி போன்றவை உண்டாகலாம். பால்வினை நோய் தொற்று, சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகக் கற்கள், புரோஸ்டேட் கோளாறுகள் இருந்தால் இதுபோன்ற உணர்வு ஏற்படும். நீரிழிவு மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் கூட ஆண்கள் மத்தியில் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணியாக விளங்குகின்றன.

கர்ப்ப காலத்தின்போது பெண்களுக்கு கருப்பை பெரிதாகிவிடும். மேலும், சிறுநீர் பையில் அழுத்தம் அதிகரித்துக் காணப்படும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதிலும் இரு வகை இருக்கிறது. சிலருக்கு சிறிதளவு சிறுநீர் கழியும், சிலருக்கு பெருமளவு சிறுநீர் கழியும் எனப்படுகிறது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது அவசியம். ஒருவேளை பயப்படும் அளவிற்கு எந்தப் பிரச்னையும் இல்லையெனில், நீங்கள் இயற்கை உணவுகளை உண்டே இதற்கு நல்ல தீர்வு காணலாம்.

இதையும் படியுங்கள்:
மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!
Frequent urination

மாதுளையின் தோலை நன்கு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். சிட்டிகை அளவு பேஸ்ட்டை சில துளி நீர் கலந்து பருகுங்கள். ஒரு நாளுக்கு இருமுறை என ஐந்து நாட்கள் தொடர்ந்து இதைப் பருகிவந்தால், சிறுநீர் பையின் வெப்பம் குறையும், அடிக்கடி சிறுநீர் கழியும் பிரச்னைக்கு நல்ல தீர்வளிக்கும்.

நூறு கிராம் அளவு கொள்ளை வறுத்துக்கொள்ளவும். அதை வெல்லத்துடன் சேர்த்து கலந்து உட்கொள்ளுங்கள். சிறுநீர் பாதை தொற்றுக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது கொள்ளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.

இந்த இரண்டு வீட்டு மருத்துவ முறையும் பக்கவிளைவுகள் அற்றவை. மேலும், இதை நீங்கள் மிகவும் சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com