கோடைக் காலத்தில் மறந்தும் கூட செய்யக்கூடாத 12 தவறுகள் தெரியுமா?

Do you know 12 mistakes that should not be done during summer?
Do you know 12 mistakes that should not be done during summer?https://tamil.boldsky.com

கோடைக் காலத்தில் நாள்தோறும் சூரியன் சுட்டெரித்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் மறந்தும் கூட செய்யக்கூடாத 12 தவறுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. கோடைக் காலத்தில் வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். நைலான் சிந்தடிக் போன்ற உடைகளை அணிந்தால் உடலில் வியர்வை சுரப்பது அதிகமாகி அவதிக்கு உள்ளாக நேரிடும்.

2. வெளியில் சென்று விட்டு வந்ததும் வியர்கிறதே என்று உடனே குளிக்கச் செல்லக்கூடாது. ஃபேனைப் போட்டு பத்து நிமிடம் நன்றாக வியர்வையை போக்கி விட்டுத்தான் குளிக்கச் செல்ல வேண்டும்.

3. சிலர் வெயிலில் அலைந்து விட்டு வந்ததும் ஃபிரிட்ஜை திறந்து மடக்கு மடக்கு என்று ஐஸ் வாட்டர் குடிப்பார்கள். அதுவும் தவறு. ஐந்து நிமிடம் கழித்து சாதாரண நீர் அருந்த வேண்டும். இல்லையென்றால் ஜில்லென்ற மண்பானைத் தண்ணீர் அருந்தலாம்.

4. சிலர் கடைகளில் விற்கும் ஃப்ரூட் ஜூஸ் குடிப்பார்கள். அந்தத் தண்ணீர் சுத்தமானதா என்று தெரியாது. மேலும் ஐஸ் கட்டிகள் போட்டு குடிக்கும்போது அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். பழங்களாக சாப்பிடுவதே சிறந்தது. அப்போதுதான் நார்ச்சத்து உடலுக்குக் கிடைக்கும். தள்ளுவண்டி கடைகளில் கம்பங்கூழ், ராகிக்கூழ், மோர் போன்றவற்றை அருந்தலாம்.

5. குளித்துவிட்டு உடலை நன்றாகத் துவட்ட வேண்டும். சிலர் வெயில் காலத்தில் உடலை துவட்டாமல் அப்படியே உடை அணிந்து கொள்வார்கள். அவர்களுக்கு சரும நோய்களும் பூஞ்சை தொற்றுகளும் ஏற்படும்.

6. சிலர் உள்ளாடைகளை வீட்டிற்குள்ளேயே வெயில் படாத இடத்தில் உலர வைப்பார்கள். இது மிகவும் தவறு. உள்ளாடைகளை எப்போதும் நன்றாக சுளீர் என்று வெயில் அடிக்கும் இடத்தில்தான் போட வேண்டும். வெயில் ஒரு சிறந்த கிருமி நாசினி. அது உள்ளாடையில் உள்ள கிருமிகளை அழித்துவிடும்.

7. மசாலா நிறைந்த காரமான உணவுகளை உண்ணக்கூடாது. அது இன்னும் அதிகமாக வியர்வை தோன்ற வழிவகுக்கும். அசைவ உணவுகளை சிலர் கோடைக் காலத்தில் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். இது சரியாக ஜீரணம் ஆகாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வைட்டமின் குறைபாடுகளால்  உண்டாகும் ஆரோக்கிய சீர்கேடு தெரியுமா?
Do you know 12 mistakes that should not be done during summer?

8. கோடையில் அடிக்கடி குடும்பத்தினருடன் சிலர் வெளியில் செல்வார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் ஊர் சுற்றுவது உடலுக்குக் கேடு. எனவே, நன்றாக திட்டமிட்டு வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இருமுறையோ வெளியில் செல்வது நலம்.

9. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை காலை 10 மணிக்கு மேல் வெளியில் கடைக்கோ அல்லது வேறு பணிகளுக்கோ அனுப்பக் கூடாது. வெயிலின் தாக்கம் தாளாமல் ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புள்ளது. நடந்து செல்லும்போது எப்போதும் குடை அல்லது தொப்பி அணிந்து செல்வது நலம்.

10. பிள்ளைகளை காலை 10 மணிக்குள்ளாகவும் மாலை 5 மணிக்கு மேலும் சற்று வானிலை குளிர்ந்ததாக இருக்கும் நேரத்தில் மட்டுமே வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும்.

11. போதுமான அளவு நீர் பருகுவது அவசியம். இல்லை என்றால் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்பு ஏற்படுத்திவிடும். குறிப்பாக பெரியவர்களும் குழந்தைகளும் சரியான அளவு நீர் பருகுகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும்.

12. கோடைக் காலத்தில் அதிக அளவில் மாம்பழங்களும் பலாப்பழங்களும் உண்ணுவது வயிற்றுப்போக்கு மற்றும் சூடு சம்பந்தமான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, அளவாக அவற்றை எடுத்துக்கொள்வது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com